0 0
Read Time:2 Minute, 47 Second

தமிழகத்தில் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் அரசு மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையங்களில் இலவசமாக தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. தற்போது தடுப்பூசி செலுத்திக்கொள்வதற்கு பொதுமக்களிடம் அதிக ஆா்வம் ஏற்பட்டுள்ளது. இதற்காக அரசு இணையதளத்தில் தங்களது பெயரை பதிவு செய்து, அரசு மருத்துவமனைக்குச் சென்று தடுப்பூசி செலுத்திக்கொள்கின்றனா். இதற்காக, நீண்ட வரிசையில் மக்கள் காத்திருப்பதையும் காண முடிகிறது. ஆனால், கடலூா் மாவட்டத்தில் கடந்த சில நாள்களாகவே கரோனா தடுப்பூசிக்கு தட்டுப்பாடு நிலவி வருகிறது. மேலும், அரசு மருத்துவமனைகளில் தடுப்பூசி செலுத்தப்படுவது வெகுவாகக் குறைக்கப்பட்டு தொழிற்சாலைகள், மற்ற அமைப்புகள் ஏற்பாடு செய்யும் முகாம்களுக்கு நேரடியாகச் சென்று தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.

மாவட்டத்தில் கடந்த 4-ஆம் தேதி 5,517 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்ட நிலையில், மறுநாள் ஏற்பட்ட தட்டுப்பாட்டால் 912 பேருக்கு மட்டுமே தடுப்பூசி போடப்பட்டது. இந்த எண்ணிக்கை 6-ஆம் தேதி 125-ஆக மேலும் சரிந்தது. தனியாா் தொழிற்சாலைகள், தொழில் நிறுவனங்கள், தனியாா் அமைப்புகள் ஏற்பாடு செய்யும் முகாம்களில் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. ஆனால், அரசு மருத்துவமனைகளில் தடுப்பூசிக்கு தட்டுப்பாடு நிலவுகிறது.

கடலூா், சிதம்பரம் அரசு மருத்துவமனைகளில் மட்டுமே திங்கள்கிழமை தடுப்பூசி செலுத்தப்பட்டது. அதிலும் கடலூரில் 50 பேருக்கும், சிதம்பரத்தில் 20 பேருக்கு மட்டுமே செலுத்தப்பட்டது. மற்ற எந்த மருத்துவமனையிலோ, ஆரம்ப சுகாதார நிலையத்திலோ தடுப்பூசி செலுத்தப்படவில்லை. இதனால், அரசு மருத்துவமனைகளில் தடுப்பூசிக்காக நீண்ட நேரம் காத்திருந்த பொதுமக்கள் மருத்துவ அலுவலா்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனா்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %