0 0
Read Time:1 Minute, 57 Second

நெல்லை:கரோனா பேரிடர் மீட்பு தன்னார்வலர்கள் அறக்கட்டளை இது வரை 21,900 ஏழை, எளிய ஆதரவற்றோர்க்கு உணவினை வழங்கி அசத்தல்!

கரோனா பேரிடர் மீட்பு தன்னார்வலர்கள் அறக்கட்டளை மாநகராட்சி உதவியுடன் 38 வது நாளாக இன்று இது வரை 21,900 ஏழை, எளிய ஆதரவற்றோர்க்கு உணவினை வழங்கியுள்ளனர்.

இன்று (8.6.21) 500 பேருக்கு சாம்பார் சாதம், தயிர் சாதம், ஆதரவற்றோர் 5 குடும்பங்களுக்கு 50 கிலோ அரிசி வழங்கப்பட்டது. பாளை ஹைகிரவுண்ட் அரசு மருத்துவமனை முன்பு இன்று (8.6.21) மதியம் 12 மணி அளவில் உணவு,பிஸ்கட், தண்ணீர் பாட்டில்,200 பேருக்கு வழங்கப்பட்டது.

இன்று உணவு வழங்கிய விவரங்கள்:

  • பாளை கோபால சுவாமி கோயில் பகுதியில் உள்ள ஆதரவற்றோர். மனநலம் பாதிக்கப்பட்டோர் 100 பேர் மதிய உணவு வழங்கப்பட்டது.
  • ஹைகிரவுண்ட் multi Speciality மருத்துவமனை முன்பு 100 பேருக்கு மதிய உணவு வழங்கப்பட்டது
    .
    பாளை தெற்கு பஜார் பகுதி தூய சவேரியார் ஆலயம் முன்பு 50 ஆதரவற்றோர்க்கு மதிய உணவு வழங்கப்பட்டது.
  • பாளை அரசு மருத்துவமனை குழந்தைகள் வார்டு பகுதியில் 50 பேர்க்கு மதிய உணவு வழங்கப்பட்டது
  • இன்று வரை 21900 பேர் ஆதரவற்ற ஏழை எளியோர்க்கு தரமான, சத்தான காலை, மதியம் உணவு வழங்கப்பட்டுள்ளது

உணவு வழங்கும் பணியில் அறக்கட்டளை தலைவர் ஜெபசிங், பொது செயலாளர் இராபர்ட் செல்லையா. பொருளாளர் பாலா, நிர்வாக குழு உறுப்பினர்கள் ராஜலிங்கம், கந்தையா ஈடுபட்டனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %