Read Time:53 Second
நீட் தேர்வை ரத்து செய்வதாக கூறி, திமுக ஏமாற்றுவதாக பாஜக மாநிலத் தலைவர் எல். முருகன் அறிக்கை!.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், நீட் தேர்வின் தாக்கத்தை அறிய ஏ.கே. ராஜன் தலைமையில் குழு அமைத்துள்ளதாக சாடியுள்ள எல்.முருகன், இதன் மூலம் 7 புள்ளி 5 சதவிகித இட ஒதுக்கீட்டில் பயனடைவதை தடுக்க, திமுக முயல்வதாக குற்றம்சாட்டினார். இதுதான், ஏழை மாணவர்கள் மீது திமுக காட்டும் பரிவா என கேள்வி எழுப்பிய அவர், நீட் தேர்வு விவகாரத்தில் அரசியல் செய்ய வேண்டாம் என கோரியுள்ளார்.