0 0
Read Time:2 Minute, 30 Second

தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் முற்றிலுமாக மூடப்பட்டுள்ளதால் தமிழகப் பகுதியான கடலூர் -புதுவை எல்லையில் உள்ள மதுபானக் கடைகளின் தமிழக பகுதியை சேர்ந்த பலர் மது பாட்டில்களை வாங்க படையெடுத்துள்ளனர்.

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக புதுச்சேரியில் கடந்த 45 நாட்களாக ஊரடங்கு அமலில் இருந்ததால் மதுபான கடைகள் முற்றிலுமாக மூடப்பட்டிருந்தன. இந்த நிலையில் இன்று முதல் காலை 9 மணிமுதல் மாலை 5 மணி வரை மதுபான கடைகள் திறக்கலாம் என அம்மாநில ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் அறிவித்திருந்தார். இந்நிலையில் இன்று காலை 9 மணிக்கு கடலூர் தமிழகம் புதுவை எல்லையான முள்ளோடு பகுதியில் உள்ள அனைத்து மதுபான கடைகளும் திறக்கப்பட்ட நிலையில் மதுபாட்டில்களை வாங்கிச் செல்ல சுமார் 500க்கும் மேற்பட்ட மது பிரியர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தங்களுக்கு தேவையான மதுபாட்டில்களை வாங்கிச் செல்கின்றனர்.

இந்த நிலையில் தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் முற்றிலுமாக மூடப்பட்டுள்ளதால் தமிழகப் பகுதியான கடலூர் -புதுவை எல்லையில் உள்ள மதுபானக் கடைகளின் தமிழக பகுதியை சேர்ந்த பலர் மது பாட்டில்களை வாங்க படையெடுத்துள்ளனர்.

இந்த நிலையில் தமிழகப் பகுதியில் இருந்து மது பிரியர்கள் மது பாட்டில் வாங்க அதிக அளவில் புதுவைக்கு படையெடுத்துள்ளனர். இதனால் மது கடத்தலை தடுக்கும் விதமாக கடலூர் மாவட்ட போலீசார் கடலூர் புதுவை எல்லைப் பகுதிகளான ஆல்ப்பேட்டை , பெரியகங்கணாங்குப்பம், மருதாடு, கண்டமங்கலம் உள்ளிட்ட சுமார் 13 சோதனைச் சாவடிகளில் போலீசார் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %