சீனாவின் ஊஹான் ஆய்வுக்கூடத்தில் இருந்து கொரோனா வைரஸ் பரவியதாக, அமெரிக்காவின் தேசிய ஆய்வுக்கூடம் ஒரு ரகசிய அறிக்கையில் கூறியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால் இதைப் பற்றி மேலும் விவரங்களை வெளிட சொல்லி சீனாவை வற்புறுத்த முடியாது என்று உலக சுகாதார நிறுவனம் கூறியுள்ளது.
2021 ஜனவரியில் ஊஹான் நகரில் உலக சுகாதார நிறுவனத்தின் நிபுணர் குழுவினர் நடத்திய விசாரணைகளில், தெளிவான ஆதாரங்கள் எதுவும் கிடைக்கவில்லை.
இதற்கிடையே அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள லாரன்ஸ் லிவர்மோர் தேசிய ஆய்வுக்கூடம், ஒரு ரகசிய ஆய்வறிக்கையை 2020ஆம் ஆண்டு மே மாதம் வெளியிட்டதாக, அமெரிக்காவின் புகழ்பெற்ற வால் ஸ்டீரீட் ஜர்னல் என்ற நாளிதழில் செய்தி வெளியிட்டுள்ளது.
கொரோனா வைரஸ் சீனாவின் ஊஹான் வைரஸ் ஆய்வுக்கூடத்தில் இருந்து முதல் முறையாக மனிதர்களிடம் பரவியிருக்கலாம் என்று இந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.
இந்த ரகசிய அறிக்கை பற்றி கருத்துக் கூற, லாரன்ஸ் லிவர்மோர் தேசிய ஆய்வுக்கூடம் மறுத்துவிட்டது.
இதனிடையே, கொரோனா வைரஸ் தோற்றம் பற்றி மேலும் அதிக தவல்களை வெளியிடச் சொல்லி சீனாவை வற்புறுத்த முடியாது என்று உலக சுகாதார நிறுவனம் கூறியுள்ளது.
ஆனால், இது தொடர்பான ஆய்வுகளை அடுத்தக் கட்டத்திற்கு எடுத்து செல்ல திட்டமிட்டுள்ளதாக உலக சுகாதார நிறுவனம் கூறியுள்ளது.