தினம் தினம் ஏதாவது ஒரு விஷயத்தை பற்றி மக்களை பேச வைத்து வருகிறார் சேப்பாக்கம் தொகுதி எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலின். அந்த வகையில், தொகுதி மக்களை சந்திக்க நேற்று ஆட்டோவில் வந்து இறங்கியதுதான் இப்போதுவரை பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
வழக்கமாக தொகுதிக்குள் ஆய்வு செய்யவும், மக்களை சந்திக்கவும் சொகுசு காரில்தான் வந்திறங்குவார் உதயநிதி.. ஆனால், தற்போது ஆய்வு மேற்கொண்டு வரும் பகுதியானது, கூட்ட நெரிசல் அதிகம் உள்ள பகுதியாகும்.
கார் போன்ற வாகனங்களும் செல்ல முடியாத அளவுக்கு உள்ளது.. மேலும் இந்த பகுதியில் பல இடங்களில் கார் உட்பட பல வாகனங்கள் போக முடியாத அளவுக்கு சந்துகள் நிறைய உள்ளன.. இந்த சிரமத்தினால்தான், காரை தவிர்த்துவிட்டு, தன் வீட்டு தெரு முனையில் இருந்து ஒரு ஆட்டோக்கார அண்ணாவை வரவழைத்து அந்த ஆட்டோவில் ஏறி கிளம்பினார்.
இவர் மட்டுமல்ல, இவருடன் வழக்கமான வரும் அதிகாரிகளையும் ஆட்டோ பிடித்து கொண்டே தொகுதிக்கு வந்துவிடுமாறும் போனை போட்டு சொல்லி உள்ளார்.. உதயநிதி ஸ்டாலின், அமைச்சர் சேகர்பாபு, தயாநிதி மாறன் உட்பட எல்லாரும் ஆட்டோவில் வந்து இறங்கினார்கள்.
செய்தியாளர்களை சந்தித்த தமிழக பாஜக தலைவர் எல்.முருகனும் இதையேதான் கூறினார்.. அவர் பேசும்போது சொன்னதாவது:
“உதயநிதி தேவைக்காகவே இப்படி ஆட்டோவில் போனதாக வைத்து கொண்டாலும், இவருக்கும்தான் சட்டம் பொருந்தும்.. சட்டத்தை கடைப்பிடிக்க வேண்டியவர்கள் அனைவரும்தான்.. சட்டத்தை கடைப்பிடித்துதான் ஆட்டோவில் வந்தால் சரி.. இல்லாவிட்டால், ஊரடங்கில் விதிகளை மீறிய அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கேட்டுக் கொண்டார்.