0 0
Read Time:2 Minute, 16 Second

கொரோனா பெருந்தொற்று அதிவேகமாக பரவிவரும் இச்சமயத்தில் முழுஊரடங்கு தமிழக அரசால் அறிவிக்கப்பட்டு மக்கள் அனைவரும் பொருளாதார ரீதியில் பாதிப்படைந்துள்ள இக்காலகட்டத்தில் நுண் நிதி நிறுவனங்கள் (Micro Finance Institution) மற்றும் சிறு நிதி வங்கிகள் (Small Banking Finance) மூலம் மகளிர் குழுக்கள் பெற்றுள்ள கடன்களை திரும்ப செலுத்துதலில் கண்டிப்பு காட்டக்கூடாது, மேலும் கட்டாயப்படுத்தி வசூல் செய்யக்கூடாது என தெரிவிக்கப்பட்டது.

இதனை மீறி எந்தவொரு சிறு நிதி வங்கிகள் (Micro Finance Institution), நுண்நிதி நிறுவனங்களும் (Small Banking Finance) தங்கள் நிறுவனத்தின் மூலம் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு வழங்கப்பட்ட கடனை திரும்ப செலுத்த நிர்பந்தப்படுத்தியோ அல்லது கட்டாயப்படுத்தியோ வசூல் செய்திடும் தகவல் தெரியவந்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அறிவுறுத்தப்படுகிறது. மேலும், மகளிர் சுயஉதவிகுழு உறுப்பினர்களுக்கு சிறு நிதி வங்கிகள் (Small Banking Finance), நுண்நிதி நிறுவனங்கள் (Micro Finance Institution) மீது ஏதேனும் புகார்கள் இருக்கும் பட்சத்தில் அவர்களுடைய நிறுவனம் வழங்கிய கடன் அட்டையில் தெரிவிக்கப்பட்டுள்ள நிறுவன தலைமையக தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு தங்களது புகாரினை தெரிவிக்கலாம்.

மேலும் சம்பந்தப்பட்ட நிறுவனம் மற்றும் நிறுவன பணியாளர்கள் விபரத்தினை குறித்து கொண்டு 18001021080 என்ற இலவச தொலைபேசி எண் மூலம் திங்கள் முதல் சனி வரை காலை 9.30 முதல் மாலை 5.30 வரை தொடர்பு கொண்டு புகாரினை தெரிவித்திடலாம்.

நன்றி: மயிலைகுரு

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %