0 0
Read Time:1 Minute, 54 Second

சீர்காழியில் மரக்கிளை முறிந்து விழுந்து 4 வீடுகள் சேதமடைந்தன. இதில் காயம் அடைந்த  4 பேர் சீர்காழி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

சீர்காழி குமரன் கோவில் தெருவில் சாலையோரத்தில் 100 ஆண்டுகள் பழமையான அரச மரம் உள்ளது. அந்த மரத்தின் கிளை நேற்று மாலை திடீரென முறிந்து அருகில் இருந்த கவுசல்யா (வயது 40), வாசுகி (45), சுசீலா(60), துரை (40) ஆகியோர் வீட்டின் மீது விழுந்தது. 

இதில் 4 வீடுகளும் முற்றிலும் சேதம் அடைந்தன. வீட்டில் இருந்த கவுசல்யா, இவருடைய மகன்கள் விஜய் (4), நிஷாந்த் (3) மற்றும் வாசுகி ஆகியோர் காயம் அடைந்தனர். இவர்கள் 4 பேரும் சிகிச்சைக்காக சீர்காழி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

பன்னீர்செல்வம் எம்.எல்.ஏ. ஆறுதல்:மரக்கிளை விழுந்ததில் பலர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். இதுகுறித்து தகவல் அறிந்த சீர்காழி தீயணைப்புத்துறை வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து வீட்டின் மீது விழுந்து கிடந்த மரக்கிளையை வெட்டி அகற்றினர்.இதுபற்றி தகவல் அறிந்த பன்னீர்செல்வம் எம்.எல்.ஏ. சம்பவ இடத்துக்கு நேரில் வந்து பார்வையிட்டு பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %