0 0
Read Time:1 Minute, 23 Second

மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு மாவட்ட கலெக்டர் லலிதா தலைமையில் குழந்தை தொழிலாளர் முறை அகற்றுவதற்கான உறுதிமொழியை அரசு அலுவலர்கள் எடுத்துக் கொண்டனர்.

பின்னர் மாவட்ட கலெக்டர் கூறுகையில், இந்திய அரசியலமைப்பு விதிகளின்படி கல்வி பெறுவது குழந்தைகளின் அடிப்படை உரிமை என்பதால் 14 வயதிற்குட்பட்ட குழந்தைகளை ஒருபோதும் எந்தவித பணிகளிலும் ஈடுப்படுத்தக் கூடாது. அவர்கள் பள்ளிக்கு செல்வதை ஊக்குவிக்க வேண்டும்.


குழந்தை தொழிலாளர் முறையினை முற்றிலுமாக அகற்றிட சமுதாயத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்திட வேண்டும். குழந்தை தொழிலாளர் இல்லா நிலையை உருவாக்கிட அனைவரும் பாடுபட வேண்டும் என்றார்.இந்த நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் முருகதாஸ் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %