Read Time:1 Minute, 20 Second
மதுக்கடைகள் திறப்பின்போது பணியாளர்கள் கடைபிடிக்க வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகளை அரசு வெளியிட்டுள்ளது.
டாஸ்மாக் மதுபான கடைகளில் ஒரே நேரத்தில் 5 நபர்களுக்கு மேல் அனுமதிக்கக்கூடாது.
மதுபானம் வாங்க வருவோர் 6 அடி இடைவெளிவிட்டு சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும்.
ஒரு அடி சுற்றளவு கொண்ட வட்டத்தினை தடுப்பு வேலிக்குள் வரைய வேண்டும்.
கடைகளை திறக்கும் போதும், மூடும் போதும் கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்ய வேண்டும்.
பணியாளர்கள் கட்டாயம் மூன்றடுக்கு முகக்கவசம் அணிய வேண்டும்.
பணியாளர்கள், மதுபானம் வாங்க வருவோரை சமூக இடைவெளியுடன் வாங்குமாறு நடைமுறைப்படுத்த வேண்டும்.
கூட்டத்தை கட்டுப்படுத்த தடுப்பு வேலி போடப்பட்டிருக்க வேண்டும் உள்ளிட்ட 14 வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது.