0 0
Read Time:2 Minute, 51 Second

இன்று முதல் 27-மாவட்டங்களில் காலை 6 மணி முதல் தேநீர் கடைகளை திறந்து கொள்ள அனுமதி!.
சலூன் கடைகள் அழகு நிலையங்கள் போன்றவற்றையும் திறந்து கொள்ள அனுமதி!!

தமிழகத்தில், கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு, சேலம், கரூர் , நாமக்கல், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய 11 மாவட்டங்களில் ஓரளவு தளர்வுகளும், சென்னை உள்ளிட்ட பிற 27 மாவட்டங்களில் இன்னும் சற்று அதிகமான தளர்வுகளும் இன்று முதல் அமலுக்கு வந்துள்ளன. வரும் 21ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிப்பு காலத்தில் இந்த புதிய விதிமுறை அமலில் இருக்கும். 21ம் தேதிக்கு பிறகு ஊரடங்கு நீட்டிப்பு அல்லது எவ்வாறு கட்டுப்பாடுகள் விதிப்பது என்பது பற்றி அப்போது அறிவிக்கப்படும்.

11 மாவட்டங்களில் தேநீர் கடை திறப்பதற்கு அனுமதி வழங்கப்படவில்லை. அதேநேரம் சென்னை உள்ளிட்ட 27 மாவட்டங்களில் காலை 6 மணி முதல் தேநீர் கடைகளை திறந்து கொள்ள அனுமதி வழங்கப்பட்டிருப்பதால் இன்று காலை 6 மணிக்கு தேனீர் கடைகள் திறக்கப்பட்டு வியாபாரம் தொடங்கி உள்ளதை பார்க்க முடிகிறது. தேநீர் கடைகளில் பார்சல் சேவை மட்டும் வழங்கலாம் எனவும் தமிழக அரசு அறிவித்துள்ளதால், மக்கள் பார்சல் வாங்கிச் செல்கிறார்கள்.

சலூன் கடைகள் அழகு நிலையங்கள் போன்றவற்றையும் திறந்து கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அவை காலை 9 மணிக்கு மேல் திறக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக சிறிது சிறிதாக சென்னை உள்ளிட்ட 27 மாவட்டங்களில் இயல்பு நிலைக்கு திரும்ப தொடங்கியுள்ளன.

11 மாவட்டங்களை பொறுத்தளவில், வேலைக்கு செல்வோர் வாகனங்களுக்கு இ-பதிவு பெற்று பயணிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. வீட்டு பராமரிப்பு சேவைகளை மேற்கொள்ள அனுமதிக்கப்பட்டுள்ளது. மிதிவண்டி மற்றும் இரு சக்கர வாகனங்கள் பழுது நீக்கும் கடைகள் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மட்டும் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %