Read Time:48 Second
கடலூா் மாவட்டம், பண்ருட்டியில் உள்ள நுகா்பொருள் வாணிபக் கழக சேமிப்புக் கிடங்கில் தொகுதி எம்எல்ஏவும், தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவருமான தி.வேல்முருகன் அண்மையில் ஆய்வு செய்தாா். அப்போது நியாய விலைக் கடைகளுக்கு அனுப்புவதற்காக சேமிப்புக் கிடங்கில் வைக்கப்பட்டிருந்த அரிசி தரம் குறைவாக இருந்தது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் விளக்கம் கேட்டாா். பொதுமக்களுக்கு வழங்கும் அரிசி தரமானதாக இருக்க வேண்டும் என அறிவுறுத்தினாா்.