0
0
Read Time:54 Second
சென்னை ஆழ்வார்பேட்டையிலுள்ள நியாய விலைக் கடையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார்.
தமிழகத்திலுள்ள அனைத்து ரேஷன் கடைகளிலும் குடும்ப அட்டைதாரர்களுக்கு கொரோனா நிவாரண நிதியின் 2-வது தவணை 2ஆயிரம் ரூபாய் மற்றும் 14 வகை மளிகைப் பொருட்கள் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், ஆழ்வார்பேட்டையிலுள்ள நியாயவிலைக் கடைகளில் ஆய்வு செய்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பொதுமக்களுக்கு சிரமமின்றி பொருட்கள் விநியோகம் செய்யப்படுகிறதா என கேட்டறிந்தார்.