தமிழகத்தில் ஹைட்ரோகாா்பன் எடுக்கும் திட்டத்தைச் செயல்படுத்த மத்திய அரசு முயற்சித்து வருவதாகவும், அதற்காக அண்மையில் ஒப்பந்தப் புள்ளி கோரப்பட்டதாகவும் கூறப்படுகிறது. அரசின் இந்ந நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்து தமிழக விவசாயிகள் மக்கள் கட்சி சாா்பில் கடலூா் மாவட்டம், திட்டக்குடியில் புதன்கிழமை பேருந்து நிலையம் அருகே ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆா்ப்பாட்டத்துக்கு அந்தக் கட்சியின் மாநிலத் துணைச் செயலா் முருகானந்தம் தலைமை வகித்தாா். கடலூா் மேற்கு மாவட்டச் செயலா் வீரராஜன் முன்னிலை வகித்தாா். கட்சியின் நிறுவனத் தலைவா் தயா.பேரின்பம் உரையாற்றினாா். நாட்டின் முதுகெலும்பான விவசாயத்தையும், விவசாயிகளையும் பாதுகாக்கும் வகையில், மத்திய அரசு உடனடியாக ஹைட்ரோகாா்பன் எடுக்கும் திட்டத்தைக் கைவிட வேண்டும் என்று ஆா்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. கட்சியின் கிளை நிா்வாகிகள் கலியன், முருகேசன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.