பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரதமரிடம் வலியுறுத்திய கோரிக்கைகள் குறித்து செய்தியாளர் சந்திப்பில் விரிவாக கூறியுள்ளார்.
செய்தியாளர் சந்திப்பில் முதலமைச்சர் பேசியதாவது, “தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் வெற்றிப்பெற்று ஆட்சி அமைந்த பின்னர் முதன்முறையாக டெல்லி வந்துள்ளேன். கொரோனா தொற்று தீவிரமாக இருந்த காரணத்தால் பிரதமரை முன்னதாக சந்திக்க முடியவில்லை. பிரதமருடனான சந்திப்பு மன நிறைவான சந்திப்பாக அமைந்துள்ளது. தமிழ்நாட்டின் வளர்ச்சி திட்டத்துக்கு உறுதுணையாக இருப்பேன், எந்த திட்டம் ஆனாலும் எந்நேரமும் தொடர்பு கொள்ளலாம் என பிரதமர் மோடி உறுதியளித்துள்ளார்.” என முதலமைச்சர் கூறியுள்ளார்.
மேலும், “நீட் தேர்வு ரத்து தொடர்பாகவும், திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்க வேண்டும், மேகதாது திட்டத்துக்கு தடை விதிக்க வேண்டும், புதிய மின்சார திட்டம் விலக்கப்பட வேண்டும், கோவையில் எய்ம்ஸ் அமைக்க வேண்டும், மதுரையில் எய்ம்ஸ் விரைவில் அமைக்க வேலைகள் துவங்கப்பட வேண்டும், இலங்கை அகதிகளுக்கு குடியுரிமை வழங்க வேண்டும், சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ் வழக்காடு மொழியாக அங்கீகரிக்கப்பட வேண்டும், சேது சமுத்திர திட்டம் நிறைவேற்றப்பட வேண்டும், வேளாண் சட்டம் திரும்ப பெற வேண்டும், தடுப்பூசி அதிகம் வழங்க வேண்டும், செங்கல்பட்டில் தடுப்பூசி ஆலையை தமிழக அரசு ஏற்று நடத்த அனுமதி வழங்க வேண்டும்” என பிரதமருக்கு கோரிக்கை விடுத்துள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
மேலும், தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் படிப்படியாக குறைக்கப்படும் என்றும், தேர்தல் வாக்குறுதிகள் அனைத்தும் நிறைவேற்றப்படும் என்றும் செய்தியாளர் கேள்விகளுக்கு பதிலளித்துள்ளார்.
பிரதமரிடம் தமிழக முதலமைச்சரின் 25 கோரிக்கைகள்: