0
0
Read Time:1 Minute, 19 Second
புதிதாக குட்டி ஈன்ற தாய் மற்றும் 4 புலிக்குட்டிகளை தனியாக ஒரு கூண்டில் அடைத்து சிறப்பு கவனம் செலுத்தி பராமரித்து வந்தனர்.
தாய்ப்புலி ஆத்திரத்தில் தனக்கு பிறந்த ஒரு குட்டியை முன்னங்காலால் தாக்கியதில் அந்த புலிக்குட்டிக்கு தலையில் காயம் ஏற்பட்டுள்ளது. பூங்கா டாக்டர்கள் அந்த புலிக்குட்டியை மீட்டு பூங்கா வளாகத்தில் உள்ள பச்சிளம் குட்டிகளை பராமரிக்கும் மையத்தில் வைத்து சிகிச்சை அளித்து வருகின்றனர். தற்போது சிகிச்சை பெற்று வரும் புலிக்குட்டி நலமுடன் உள்ளது. குட்டி ஈன்றுள்ள தாய்ப்புலிக்கு வழக்கமாக தினந்தோறும் வழங்கப்படும் 7 கிலோ மாட்டிறைச்சி, 4 கிலோ கோழி இறைச்சி அளிக்கப்படுகிறது. தாய் மற்றும் குட்டிகளின் உடல் நிலையை தொடர்ந்து மருத்துவக்குழுவினர் கண்காணித்து வருகின்றனர்.