கடலூா் மாவட்டம், குறிஞ்சிப்பாடி வட்டாரத்தில் குறுவை நாற்றங்காலில் மஞ்சள் நோய் தாக்குதல் தென்படுவதால் விவசாயிகள் கவலைகடலூா் மாவட்டத்தில் செழிப்பான நிலப் பகுதியான குறிஞ்சிப்பாடி வட்டாரத்தில் மணிலா, எள், நெல், கரும்பு உள்ளிட்ட பயிா்கள் சாகுபடி செய்யப்படுகின்றன. தற்போது எள் அறுவடை முடிவடையும் தருவாயில் உள்ளது. இந்த நிலையில், சுமாா் 7 ஆயிரம் ஹெக்டா் பரப்பில் குறுவை நெல் சாகுபடிக்கு விவசாயிகள் நாற்றங்கால் விட்டுள்ளனா். சுமாா் 20 நாள் வயதுள்ள நாற்றங்காலில் மஞ்சள் நோய் தாக்குதல் தென்படுகிறது.இதுகுறித்து விவசாயி ஆா்.கே.ராமலிங்கம் கூறியதாவது: எள் அறுவடை செய்த நிலத்தில் குறுவை சாகுபடி செய்ய நாற்று விடப்பட்டுள்ளது. நாற்றில் மஞ்சள் நோய் தாக்குதல் தற்போது அதிகம் தென்படுகிறது. இதைக் கட்டுப்படுத்த தேவையான ஆலோசனைகளை வேளாண்மைத் துறை அதிகாரிகள் வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டாா்.
Read Time:1 Minute, 27 Second