0 0
Read Time:2 Minute, 43 Second

கடலூர் மாவட்ட முதியோர்களின் நலனை காக்கும் வகையில் 822000 9557 என்ற சேவை எண் அறிமுகம்!

கடலூர் மாவட்ட முதியோர்களின் நலனை காக்கும் வகையில் ஹலோ சீனியர் என்ற புதிய காவல்துறை சார்பில் செல்போன் எண் 822000 9557 என்ற எண்ணை கடலூர் மாவட்ட போலீஸ் எஸ்பி சக்தி கணேசன் அறிமுகப்படுத்தியுள்ளார்.
இந்த ஹலோ சீனியர் புதிய திட்டத்தின் மூலம் கடலூர் மாவட்டத்திலுள்ள வயதான முதியவர்கள் தங்களுக்கு ஏற்படும் சட்டரீதியான புகார்களை மேற்கண்ட எண்ணின் புகார் தெரிவித்தால் போலீசார் நேரில் சென்று விசாரணை மேற்கொண்டு உடனடியாக நடவடிக்கை மேற்கொள்வார்கள.

மேலும் கடலூர் மாவட்ட பெண்களின் நலன் காக்க லேடிஸ் பஸ்ட் என்ற 822000 6082 புதிய செல்போன் எண் அறிமுகம்.

மேலும் மேற்கண்ட எண்ணிலும் வாட்ஸ்அப் மூலமாக புகார் தெரிவிக்கலாம் மேலும் பாதிக்கப்பட்ட முதியவருக்கு பாதுகாப்பாக போலீசார் தொடர்ந்து கண்காணித்து உதவி மேற்கொள்வார்கள் அதுபோல் கடலூர் மாவட்ட பெண்களின் நலன் காக்க லேடிஸ் பஸ்ட் என்ற 822000 6082 புதிய செல்போன் எண்ணை கடலூர் மாவட்ட போலீஸ் எஸ்பி சக்தி கணேசன் அறிமுகப்படுத்தியுள்ளார் பெண்களுக்கு ஏற்படும் சட்டரீதியான புகார்களை இந்த எண்ணில் புகார் தெரிவித்தால் போலீசார் நேரில் சென்று விசாரணை மேற்கொண்டு உடனடியாக நடவடிக்கை மேற்கொள்வார்கள் பெண்கள் தங்கள் புகார் குறித்து மேற்கண்ட எண்ணில் வாட்ஸ் அப்பிலும் பதிவு செய்யலாம்.

மேலும் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு பாதுகாப்பாக போலீசார் தொடர்ந்து உதவி மேற்கொள்வார்கள் கடலூர் மாவட்ட புதிய போலீஸ் எஸ்பியின் இந்த நடவடிக்கைக்கு பொதுமக்கள் தரப்பில் வரவேற்பும் பாராட்டும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

செய்தியாளர்: பாலாஜி, சிதம்பரம்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %