அடக்குமுறைகள் மூலமாக மக்களுக்காக போராடும் நாம் தமிழர் கட்சிகளின் உறவுகளின் குரலைக் முடக்கிவிடலாம் என்று திமுக அரசு நினைக்கிறது -சீமான் கண்டனம்!
கொரோனா பெருந்தொற்று காலத்தின் மதுபானக்கடைகளைத் திறப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாம் தமிழர் கட்சி சார்பில் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக அறவழியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அப்போது போராட்டத்தில் ஈடுபட்ட 120 பேர் மீது கடுமையான சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குத் தொடுக்கப்பட்டுள்ளது. இதற்கு அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார். இது போன்ற அடக்குமுறைகள் மூலமாக மக்களுக்காக போராடும் நாம் தமிழர் கட்சிகளின் உறவுகளின் குரலைக் முடக்கிவிடலாம் என்று திமுக அரசு நினைக்கிறது.
இது போன்ற அச்சுறுத்தலுக்கு நாங்கள் ஒருபோதும் அஞ்சமாட்டோம். எனவே கடந்த காலங்களில் மதுக்கடைக்கு எதிராக திமுக போராட்டம் நடத்திவிட்டு தற்போது கடைகளை திறந்து வைப்பது நியாயம் இல்லை. இந்த ஆட்சிக்கு எச்சரிக்கை விடுக்கிறேன். உடனடியாக முதலமைச்சர் ஸ்டாலின் தலையிட்டு வழக்குப்பதிவுகளை திரும்பப்பெற வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.