0
0
Read Time:1 Minute, 1 Second
நெல்லை மாநகராட்சி புதிய ஆணையராக தமிழக அரசால் விஷ்ணு சந்திரன் இ.ஆ.ப நியமிக்கப்பட்டார் கொரோனா பேரிடர் மீட்பு தன்னார்வலர்கள் அறக்கட்டளை தலைவர் ஜெபசிங், பொது செயலாளர் இராபர்ட் செல்லையா, பொருளாளர் பாலகிருஷ்ணன் ஆகியோர் நேரில் சந்தித்து அறக்கட்டளை மூலம் கொரோனா நோய் தொற்றின் இரண்டாவது அலையின் போது நெல்லை மாநகரில் செய்த பணிகள் குறித்து எடுத்துக் கூறினர். ஆணையாளர் நிர்வாகிகள் செய்த பணிகளை பாராட்டி ஊக்கப்படுத்தினார். அறக்கட்டளை நிர்வாகிகள் ஜெபசிங், இராபர்ட் செல்லையா, பாலகிருஷ்ணன் புதிய ஆணையாளர்க்கு வாழ்த்து கூறி புத்தகங்களை பரிசாக வழங்கினார்கள்.