திருநெல்வேலி பீஸ் அறக்கட்டளை மற்றும் பீஸ் ஹெல்த் சென்டர் சார்பில் 25 சிறை கைதிகள் குடும்பத்திற்கு நிவாரண பொருட்கள் மற்றும் கரோனா பேரிடர் மீட்பு தன்னார்வலர்கள் அறக்கட்டளை நிர்வாகிகளுக்கு மனிதநேய பண்பாளர் விருது வழங்கப்பட்டது.
பீஸ் அறக்கட்டளை மற்றும் பீஸ் ஹெல்த் சென்டர் சார்பில் 25 சிறை கைதிகள் குடும்பத்திற்கு நிவாரண பொருட்கள் மற்றும் கரோனா பேரிடர் மீட்பு தன்னார்வலர்கள் அறக்கட்டளை நிர்வாகிகளுக்கு மனித நேய பண்பாளர் விருது வழங்கப்பட்டது.
பீஸ் அக்கட்டளை நிர்வாக இயக்குநர் மருத்துவர் அன்புராஜன் தலைமை வகித்தார்.ஆயர் கிப்ஸன் வரவேற்புரை நிகழத்தினார் பாளை கத்தோலிக்க மறைமாவட்ட சிறை பணி ஒருங்கிணைப்பாளர் V.S.அந்தோணிராஜ். சிறைச்சாலை நன்னடத்தை அலுவலர்கள் அசோகன். பலவேசம்.செல்வக்குமார். ஆகியோர் முன்னிலை வகித்தனர். 25 சிறை கைதிகளின் குடும்பத்திற்கு 2 மாதத்திற்கு தேவையான 3000 மதிப்புள்ள அரிசி. மளிகை பொருட்கள். காய்கறிகள் ஆகியவற்றை மருத்துவர் அன்பு ராஜன். அருட்பணி V.S.அந்தோணிராஜ் வழங்கினார்கள். கரோனா பேரிடர் மீட்பு தன்னார்வலர்கள் அறக்கட்டளை நிர்வாகிகள் கரோனா நோய் தொற்று முதல் அலை மற்றும் 2வது அலையில் சிறப்பாக சமூகப் பணி செய்ததற்கு பாராட்டு சான்றிதழ் மற்றும் மனித நேய பண்பாளர் விருதுகளை அறக்கட்டளை தலைவர் ஜெபசிங், பொது செயலாளர் இராபர்ட் செல்லையா. பொருளாளர் பாலா. நிர்வாக குழு உறுப்பினர்கள் கந்தையா. ராஜலிங்கம் ஆகியோர்க்கு சிஎஸ்ஐ ஆயர் கிப்ஸன் ஜான் தாஸ். மருத்துவர் அன்புராஜன் வழங்கினார்கள். நிகழ்வில் பாளை கத்தோலிக்க சிறை பணி செயலாளர் கஸ்பார். பால் மணி, மருத்துவமனை ஊழியர்கள். பொதுமக்கள் திரளாக கலந்துகொண்டனர். முடிவில் கரோனா பேரிடர் மீட்பு தன்னார்வலர்கள் அறக்கட்டளை தலைவர் ஜெபசிங் நன்றி கூறினார்.