கிருஷ்ணகிரி: குருபரப்பள்ளி அரசு மேல்நிலைப்பள்ளிக்கு சொந்தமான இடத்தில் பத்து ரூபாய் இயக்கம் நேரில் ஆய்வு!
கிருஷ்ணகிரி மாவட்டம் குருபரப்பள்ளி அரசு மேல்நிலைபள்ளிக்கு சொந்தமானபுல எண் 48/2ல் 9.67ஏக்கர் நிலத்தில் 2ஏக்கருக்கு மேல் ஆக்கிரமிப்பு செய்துள்ளதாகவும் இதனை அகற்றி மீண்டும் பள்ளிவசம் ஒப்படைக்கவும்,அந்த நிலத்திற்கு அரசுமேல்நிலைபள்ளி பெயரில் உடனடியாக பட்டா வழங்க வருவாய் துறைக்கு பத்து ரூபாய் இயக்கம் கோரிக்கை வைத்திருந்தனர்.
இந்நிலையில் மனு ஒன்றினை அளித்துள்ளனர். அம்மனுவின் பேரில் நேரடியாக அரசுமேல்நிலைபள்ளிக்கு சொந்தமான இடத்தில் பார்வையிட்டு ஆய்வு செய்யப்பட்டது. பள்ளிக்கு சொந்தமான ஆக்கிரமிப்பு செய்துள்ள நிலத்தை முழுமையாக சர்வே செய்து ஆக்கிரமிப்புகளை அகற்றி மீண்டும் பள்ளி நிர்வாகத்திடம் ஒப்படைக்கவேண்டும் எனவும்,அரசுமேல்நிலைபள்ளிக்கு சொந்தமான புல எண் 48/2ல் உள்ள 9.67 ஏக்கர் புறம்போக்கு நிலத்தினை குருபரப்பள்ளி அரசு மேல்நிலைப்பள்ளி பெயரில் நிலமாற்றம் செய்யவும்,குருபரப்பள்ளி ஊராட்சி நிர்வாகத்தையும்,வருவாய் துறை அதிகாரிகளையும் உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்க பத்து ரூபாய் இயக்கம் கேட்டுக்கொள்கிறது.ஆய்வின்போது மாநில துணை பொதுச்செயலாலர் G. கோவிந்தராஜ்,மாவட்ட செயலாலர் L.சக்கரவர்த்தி,ஊத்தங்கரை ஒன்றிய ஒருங்கினைப்பாளர் அ.மணி,வேப்பனப்பள்ளி ஒன்றிய துணை செயலாலர் சாமிநாதன்,கிருஷ்ணகிரி ஒன்றிய துணை செயலாலர் மாது,குண்டலப்பட்டி ஊராட்சி ஒருங்கினைப்பாளர் முருகன்,இயக்க நிர்வாகிகள் மற்றும் ஊர்பொதுமக்கள் அனைவரும் கலந்துக்கொண்டனர்.
செய்தி: மணி,கிருஷ்ணகிரி.