0
0
Read Time:1 Minute, 11 Second
தமிழகத்தில் முழு ஊரடங்கு, வரும் 28-ம் தேதி முடிவுக்கு வரும் நிலையில், கூடுதல் தளர்வுகள் அளிப்பது குறித்து மருத்துவ நிபுணர்கள், அரசு அதிகாரிகளுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்துகிறார்.
அடுத்தகட்ட ஊரடங்கு நீட்டிப்பு, தளர்வுகள், சிகிச்சை முறைகள் குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின், சென்னை தலைமைச் செயலகத்தில் மருத்துவ நிபுணர் குழுவினர், அரசு அதிகாரிகள், சிறப்பு பணிக் குழுவினருடன் இன்றுகாலை 11 மணிக்கு ஆலோசனை நடத்துகிறார். இதைத் தொடர்ந்து, தொற்று குறைவின் அடிப்படையில் மாவட்டங்களை வகைப்படுத்தி, கூடுதல் தளர்வுகள், குறிப்பாக 23 மாவட்டங்களில் பேருந்து சேவை தொடங்குதல் உள்ளிட்டவை பற்றி அறிவிப்பு வெளியாக வாய்ப்பு உள்ளதாகக் கூறப்படுகிறது.