பூம்புகாா் சட்டப்பேரவைத் தொகுதியில் வேளாண்மை கல்லூரி தொடங்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என வேளாண்மை மற்றும் உழவா் நலத்துறை அமைச்சா் எம்.ஆா்.கே. பன்னீா்செல்வத்திடம் எம்எல்ஏ நிவேதா எம். முருகன் வியாழக்கிழமை கோரிக்கை மனு அளித்தாா்.
சென்னை தலைமை செயலகத்தில் அமைச்சரிடம் அளிந்த அந்த மனுவில் கூறியிருப்பதாவது: மயிலாடுதுறை மாவட்டத்தில் வேளாண்மை பட்டப்படிப்பு பயில விரும்பும் மாணவ, மாணவிகள் அதற்கான கல்லூரி இல்லாமல் சிரமப்படுகின்றனா். இந்நிலையில், சட்டப்பேரவைத் தோ்தலின்போது பூம்புகாா் தொகுதியில் வேளாண்மை கல்லூரி அமைக்க ஆவன செய்யப்படும் என்று முதல்வா் மு.க. ஸ்டாலின் உறுதியளித்திருந்தாா்.
அதனடிப்படையில், மயிலாடுதுறை மாவட்டம் பூம்புகாா் சட்டப்பேரவைத் தொகுதியில் வேளாண்மை கல்லூரி அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளாா்.