மயிலாடுதுறை நான்கு கால் மண்டபம் அருகில் சிதலமடைந்துள்ள ஈமக்கிரியை மண்டபத்தை புணரமைத்துத்தர சமூக ஆர்வலர் அ.அப்பர்சுந்தரம் நகராட்சி ஆணையருக்கு கோரிக்கை விடுத்துள்ளார். மயிலாடுதுறை நகராட்சி 36 வார்டுகளை கொண்ட., ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கும் பெரிய நகராட்சியாகும். இந்நகராட்சியில்யில் நான்கு இடங்களில் பொது சுடுகாடுகள் அமைந்துள்ளன. மேலும் ஒரு எரிவாயு தகன மேடை சுடுகாடும் உள்ளது.இச்சுடுகாடுகளில் எரியூட்டப்படும் பெரும்பாலானவர்களின் 16ஆம் நாள் உத்திரகிரிகை மற்றும் ஈமச்சடங்குகள் நடத்துவது காவேரி க்கரையோரம் அமைந்துள்ள நகராட்சிக்கு சொந்தமான ஈமகிரிகை மண்டபம் அரசு மருத்துவமனை சாலையிலுள்ள நான்கு கால் மண்டபம் அருகில் அமைந்துள்ளது.
பெரும்பாலான மக்கள் இந்த இடத்தில்தான் ஈமக்கிரிகை சடங்குகளை செய்து வருகிறார்கள். பொது மக்களுக்கு நன்கு பயன்படும் ஈமக்கிரியை மண்டபம் தற்போது முற்றிலும் சேதமடைந்து தரைத்தளம் உடைந்து, டையில்ஸ்கள் இன்றைக்கு பெயர்ந்து மேல்தளம் சிதிலமடைந்து பராமரிப்பின்றி காணப்படுகின்றன. மேலும் அதன் அருகில் அமைக்கப்பட்டுள்ள மினி பவர் பம்பு தண்ணீர் சின்டக்ஸ்டேங்க் தொட்டியும், அடியில் உடைந்து தண்ணீர் தேங்காமல் வெளியேறி வருகின்றது.அதனால் தண்ணீரும் மின்சாரமும் வீணாகின்றது. கிரியை செய்ய வருகின்ற மக்களுக்கு தண்ணீர் கூட கிடைக்காமலும் அவதிப்படுகின்றார்கள். சுமார் 3 மணி நேரம் நடைபெறும் அந்த சடங்குகளைக்கூட நிம்மதியாக செய்ய முடியாத அளவிற்கு மேற்படி மண்டபம் முழுமையாக சிதலமடைந்து இருக்கின்றது.
கீழே அமரும்இடமும் மேற்கூரையும் உடைந்து தொங்குகின்றது. கீழே எந்த நேரத்தில் விழுமோ என்ற அபாயகரமான நிலையில் இருப்பதனால் நகராட்சி நிர்வாகம் உடனடியாக மேற்படி மண்டபத்தை புனரமைத்து தரவும் அருகிலுள்ள மினி பவர் பம்ப் உடைந்த பிளாஸ்டிக் டேங்கை தண்ணீர் வெளியேறாத வகையில் மாற்றி அமைத்து தரவும் கோரிக்கை விடுக்கின்றோம்.மேலும் அப்பகுதி முழுமையும் எப்பொழுதும் தூய்மைப்படுத்தி தரவும், மருத்துவனை சாலை முதல் நான்கு கால் மண்டபம் வரை உள்ள பள்ளத்தை மூடி மேம்படுத்தி காவேரி கரை வரை சிமெண்ட் தளம் அமைத்து சுற்றிலும் பாதுகாப்பு வேலி அமைத்து தரவும் சமூக ஆர்வலர் அ.அப்பர்சுந்தரம் நகராட்சி ஆணையருக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
நன்றி: மயிலைகுரு