0 0
Read Time:1 Minute, 27 Second

உலகப் புகழ்பெற்ற ஆன்ட்டிவைரஸ் சாஃப்ட்வேர் நிறுவனத்தை உருவாக்கிய ஜான் மெக்காஃபி, ஸ்பெயின் சிறையில் தற்கொலை செய்து கொண்டதை அவரது வழக்கறிஞர் உறுதிசெய்துள்ளார்.
வர்த்தக அடிப்படையில் உலகின் முதல் ஆன்ட்டிவைரஸ் மென்பொருளை 1987ஆம் ஆண்டு அறிமுகப்படுத்திய மெக்காஃபி, அதை இன்டல் நிறுவனத்திற்கு 2011ஆம் ஆண்டில் விற்றுவிட்டார். கிண்டலடிக்கும் கிறுக்குத்தனமான வீடியோக்களாலும் பிரபலமானவர் ஜான்மெக்காஃபி.
கொள்கை காரணமாக, தான் 8 ஆண்டுகளாக வருமான வரி செலுத்தவில்லை என 2019-ல் கூறிய மெக்காஃபி, வழக்கு விசாரணையை தவிர்க்க அமெரிக்காவில் இருந்து வெளியேறினார்.

கிரிப்டோகரன்சி மோசடி வழக்கும் இருந்த நிலையில், பார்சிலோனாவில் கைது செய்யப்பட்டார். அமெரிக்காவிற்கு நாடுகடத்தப்பட இருந்த நிலையில், பார்சிலோனா சிறையில் ஜான் மெக்காஃபி சடலமாக மீட்கப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %