சிதம்பரம்: பாலியல் வன்கொடுமை கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் பெற்றோர் மேல் முறையீடு !!
4 வயது சிறுமிக்கு நேர்ந்த பாலியல் வன்கொடுமை குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை என்பதால் கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் அச்சிறுமியின் பெற்றோர் மேல் முறையீடு செய்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.
கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே கீழ்நத்தம் கிராமம் முருகன்கோயில் தெருவில் வசிக்கும் கூலித்தொழிலாளிகள் இருவருக்கு 4 வயது நிறைந்த பெண் குழந்தை உள்ளது. கடந்த ஏப்ரல் மாதம்17-ஆம் பெற்றோர்கள் வேலைக்காக வெளியில் சென்றுள்ளனர். அப்போது அதே கிராமத்தைச் சேர்ந்த ஒருவர் சிறுமியிடம் ஆசைவார்த்தை கூறி அந்தச் சிறுமியை தனியே அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டதாகவும். இதையறிந்த அச்சிறுமியின் பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் அச்சிறுமியை சிதம்பரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு மருத்துவ பரிசோதனையில் அந்த சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டாரென்றும் அதற்கு அளிக்கப்பட்ட மருத்துவச் சான்று அடிப்படையில் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் சிதம்பரம் வட்ட காவல் நிலையத் தில் புகார் அளித்திருந்தனர். ஆனால் சிதம்பரம் வட்ட காவல் நிலையத்தினர் வழக்கு பதிவு செய்யாமல் உள்ளதாக கூறுகின்றனர். இதனால் செய்வதறியாமல் திகைத்தவர்களுக்கு
அகில இந்திய கம்யூனிஸ்டு கட்சி தேசிய பொதுச்செயலாளர் பூராசாமி தலைமையில் சிறுமியின் பெற்றோர்கள் கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளரி டம் அச்சிறுமியின் பெற்றோர் மேல் முறையீடு செய்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.
செய்தி: பாலாஜி,சிதம்பரம்.