0 1
Read Time:2 Minute, 9 Second

 கடலூர் -சேலம் தேசிய நெடுஞ்சாலை அகலப்படுத்தும் பணிகள் தற்போது முழுவீச்சில் நடந்து வருகிறது. இதில் விருத்தாசலம் மணவாளநல்லூரில் இருந்து விருத்தாசலம் ரெயில்வே மேம்பாலம் வரைக்கும் சாலை அகலப்படுத்தும் பணிக்காக அந்த பகுதியல் இருந்த மரங்கள் அகற்றப்பட்டு வருகிறது.

இதில் 150 ஆண்டுகள் பழமையான இலுப்பை மரத்தை ஊழியர்கள் வெட்டி சாய்த்தனர். பின்னர்  நேற்று பொக்லைன் எந்திரம் மூலம் அந்த மரம் வேரோடு தோண்டி எடுத்து அப்புறப்படுத்தப்பட்டது.

விருத்தாசலம்-சேலம் சாலையில் கொளஞ்சியப்பர் கோவில் செல்லும் வழியில்  பழமையான மரங்கள் அதிகம் இருந்தன. சாலை அகலப்படுத்தும் பணிக்கு இடையூறாக இருக்கும் மரங்கள் தற்போது ஒவ்வொன்றாக வெட்டி சாய்கக்கப்பட்டு வருகிறது.  
இதுகுறித்து இப்பணியில் ஈடுபட்டுள்ள ஒருவரிடம் கேட்ட போது, மணவாளநல்லூரில் இருந்து விருத்தாசலம் நகரம் வரையில் சுமார் 4 கி.மீ. சாலை உள்ளது. இந்த சாலை விரிவாக்கத்துக்கு மரங்கள் வெட்டும் பணி நேற்று முன்தினம் முதல் தொடங்கி உள்ளது. இதில் மொத்தம்  114 மரங்கள் வெட்டப்பட உள்ளதாக அவர் தெரிவித்தார்.

4 கி.மீட்டர் தூரம் உள்ள சாலையில் மொத்தம் 114 மரங்களில் இலுப்பை மரம், நாவல், வாகை, பனை , புளி, வேம்பு உள்ளிட்ட பல்வேறு மரங்கள் உள்ளது. தலைமுறை கடந்து வளர்ந்து நிற்கும் மரங்கள் நகர வளர்ச்சிக்காக வெட்டி சாய்க்கப்பட்டாலும், இதை காண்பவர்களுக்கு ஏனோ வருத்தத்தையும் சேர்ந்து தருகிறது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
100 %
Surprise
Surprise
0 %