மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி அருகே மாணிக்க பங்கு ஊராட்சியில் ஏழை எளிய மாணவர்களுக்கு விஜய் மக்கள் இயக்கம் சார்பில் மாலை நேர பயிற்சி வகுப்பு ஞாயிற்றுக்கிழமை திறக்கப்பட்டது.
கரோனா பெருந்தொற்று காரணமாக பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டு மாணவர்கள் இணையவழியில் கல்வி பயின்று வருகின்றனர். இந்நிலையில் கிராமப்புறங்களில் உள்ள ஏழை எளிய மாணவர்கள் போதிய செல்போன் வசதி இல்லாததால் அவர்களின் கல்வி கேள்விக்குறியாகும் நிலை ஏற்பட்டதைத் தொடர்ந்து, விஜய் மக்கள் இயக்கம் சார்பில் மாலை நேர பயிற்சி வகுப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.
மயிலாடுதுறை மாவட்ட தலைவர் குட்டிகோபி தலைமையில் நடைபெற்ற துவக்க விழாவில் மாணவர்களுக்கு நோட்டு புத்தகம் மற்றும் இனிப்புகள் வழங்கப்பட்டன.
இதில் மாவட்ட நிர்வாகிகள் தளபதி தினேஷ், அன்பரசன், சுமன், ரமேஷ், ஒன்றிய நிர்வாகிகள் ராஜா, வசந்த், விஜய் ஆனந்த், இளவழகன், மதன், கதிர், இளவரசன், கீர்த்தி வாசன், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். மேலும் மாணவர்களுக்கு கல்வி கற்றுத் தரும் வகையில் ஸ்ரீதளாதேவி என்ற ஆசிரியரையையும் நியமித்துள்ளனர் . மாலை 4 மணி முதல் 6 மணி வரை நடைபெறும் இந்த பயிற்சி மையத்தில் 1 ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை படிக்க கூடிய ஏழை எளிய மாணவர்கள் அனைவருக்கும் அடிப்படைக் கல்வி கற்றுத் தரப்படுவதாகவும், மேலும் முதற்கட்டமாக 50 மாணவர்களுக்கு இலவசமாக கல்வி கற்றுத் தரப்படுவதாகவும் கல்வி பயிற்றுவிக்கும் ஆசிரியை தெரிவித்தார்.