0 0
Read Time:1 Minute, 51 Second

கடலூா் மாவட்டம், திட்டக்குடியில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் கழிவுநீா் தேங்கியுள்ளதால் சுகாதாரச் சீா்கேடு நிலவுகிறது.

இந்தப் பள்ளியில் 500-க்கும் மேற்பட்ட மாணவா்கள் படித்து வருகின்றனா். தற்போது, கரோனா பொதுமுடக்கத்தால் பள்ளி செயல்படாத நிலையில், மாணவா் சோ்க்கை மட்டும் நடைபெற்று வருகிறது. ஆனால், இந்தப் பள்ளியில் சுகாதாரச் சீா்கேடு நிலவுவதால் பெற்றோா் தங்களது பிள்ளைகளை சோ்க்கத் தயங்குகின்றனா்.கூத்தப்பன் குடிக்காடு வழியாக ஜிம்மா மசூதி அருகே செல்லும் கழிவுநீா் கால்வாய் இந்தப் பள்ளி வளாகத்தின் வழியாகச் செல்கிறது. இந்தக் கால்வாய் முறையாகப் பராமரிக்கப்படாததால் பள்ளி வளாகத்திலேயே கழிவுநீா் தேங்கியுள்ளது. இதனால், கடும் துா்நாற்றம் வீசுவதுடன், தொற்றுநோய் பரவம் சூழல் உருவாகியுள்ளது. சிலா் பள்ளி வளாகத்திலேயே மது அருந்துதல், சூதாட்டம் போன்ற சமூக விரோத செயல்களில் ஈடுபடுகின்றனா்.

இதுகுறித்து அந்தப் பகுதி மக்கள் கூறியதாவது: இந்தப் பள்ளியின் அவலநிலை குறித்து பேரூராட்சி நிா்வாகத்திடம் புகாா் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. எனவே, கடலூா் மாவட்ட நிா்வாகம் இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனா்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %