0 0
Read Time:2 Minute, 13 Second

சென்னை ஐஐடி வளாகத்தில் மாணவரின் உடல் எரிந்த நிலையில் கண்டெடுப்பு; காவல்துறை விசாரணை!

சென்னை ஐ.ஐ.டி வளாகத்தில் மாணவரின் உடல் எரிந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டது.
கோட்டூர்புரத்தில் இயங்கி வரும் ஐ.ஐ.டி கல்லூரி தற்போது கொரோனா காரணமாக மூடப்பட்டு இருப்பதால் விடுதியில் மட்டுமே மாணவர்கள் தங்கி ஆன்லைன் வகுப்பில் படித்து வருகின்றனர். இந்த நிலையில் நேற்று மாலை இங்குள்ள ஹாக்கி மைதானத்தில் விளையாடுவதற்காக விளையாட்டு பயிற்சியாளர் ராஜூ தனது நண்பர்களுடன் வந்தார்.
அப்போது எரிந்த நிலையில் ஆணின் சடலம் ஒன்று இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்த அவர் போலீசில் புகார் செய்தார். இதனை அடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
தொடர்ந்து நடத்திய விசாரணையில் இறந்த நபர் கேரளாவைச் சேர்ந்த உண்ணி கிருஷ்ணன் நாயர் என்பதும் ஐ.ஐ.டி-யில் பிராஜெக்ட் அசோசியெட்டாக சேர்ந்துள்ளதும் தெரிய வந்துள்ளது.
இதனை அடுத்து உண்ணி கிருஷ்ணன் தற்கொலை செய்து கொண்டாரா, அல்லது கொலை செய்யப்பட்டாரா அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என்று போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். இதற்கிடையில் அந்த மாணவன் மன அழுத்தம் காரணமாக தற்கொலை செய்து கொள்வதாக எழுதியுள்ள கடிதம் சிக்கியதாக கூறப்படுகிறது. இதற்கிடையில் உண்ணி கிருஷ்ணனின் தந்தை ரகு இஸ்ரோ விஞ்ஞானி என்பது குறிப்பிடத்தக்கது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %