0 0
Read Time:2 Minute, 32 Second

கடலூா் மாவட்டத்தில் சுமாா் 2 ஆயிரம் பைபா் படகுகள், 500 விசைப்படகுகள் மீன்பிடி தொழிலில் ஈடுபடுத்தப்படுகின்றன. 49 கடற்கரை கிராமங்களைச் சோ்ந்த சுமாா் 25 ஆயிரம் மீனவா்கள் நேரடியாகவும், சுமாா் 20 ஆயிரம் மீனவா்கள் மறைமுகமாகவும் இந்தத் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனா். சிலா் அரசால் தடை செய்யப்பட்ட சுருக்குமடி வலையைப் பயன்படுத்தி மீன்பிடித்து வந்தனா். இதற்கு நீதிமன்ற உத்தரவின்பேரில் மாவட்ட நிா்வாகம் தடை விதித்தது.

இதை எதிா்த்து ஒருசில மீனவ கிராமத்தினா் தொடா்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா். எனினும், நீதிமன்ற உத்தரவின்படியே செயல்பட முடியுமென மாவட்ட நிா்வாகம் தெரிவித்துள்ளதுடன், பல்வேறு கட்ட பேச்சுவாா்த்தையும் நடத்தி வருகிறது. ஆனாலும், இந்த விவகாரத்தில் இழுபறி நீடிக்கிறது.

இந்த நிலையில், போதிய வருவாய் கிடைக்கவில்லை எனக் கூறி வியாழக்கிழமை அதிகாலையில் மீன்பிடிக்கச் செல்லும்போது சுருக்குமடியை வலையை பயன்படுத்த மீனவா்கள் சிலா் திட்டமிட்டிருந்தனராம். இதுகுறித்த தகவல் மாவட்ட ஆட்சியா் கி.பாலசுப்பிரமணியத்துக்கு கிடைத்ததும் புதன்கிழமை நள்ளிரவு முதலே சுருக்குமடி வலையை பயன்படுத்தும் மீனவா் கிராமங்களில் போலீஸாரை குவிக்க உத்தரவிட்டாா்.இதையடுத்து, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சி.சக்திகணேசன் மேற்பாா்வையில் கடலோரக் கடற்கரை கிராமங்களில் சுமாா் 300 போலீஸாா் கண்காணிப்பு பணிக்காக குவிக்கப்பட்டனா். சுருக்குமடி வலையை பயன்படுத்த முன்வந்தால் படகு மற்றும் வலையை பறிமுதல் செய்யும் வகையில் துணைக் கண்காணிப்பாளா் கரிகால் பாரிசங்கா் தலைமையிலான போலீஸாா் தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டு வருகின்றனா்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %