0 0
Read Time:6 Minute, 15 Second

பனை மரத்தில் இருந்து கிடைக்கும் பனை நீரில் வைட்டமின்களும், கனிமச்சத்துக்களும் ஏராளமான அளவில் நிறைந்துள்ளது. இந்த பனை நீரில் இருந்து தயாரிக்கப்படுவது தான் கருப்பட்டி. இதனை பனை வெல்லம் என்றும் அழைப்பர். இது தீங்கு விளைவிக்கும் சர்க்கரைக்கு சிறந்த மாற்றாகும். பழங்காலத்தில் இனிப்புச் சுவைக்காக கருப்பட்டியைத் தான் அதிகம் பயன்படுத்தி வந்தார்கள்.

கருப்பட்டியின் மருத்துவ குணங்கள் || karuppati medical benefits
  • கருப்பட்டியில் உடலின் அத்தியாவசிய செயல்பாட்டிற்குத் தேவையான கார்போஹைடிரேட் நிறைந்துள்ளது. ஆகவே இதனை ஒருவர் குடிக்கும் காபி அல்லது டீயில் சேர்த்துக் குடிப்பதால், கலோரிகளின்றி உடலின் ஆற்றல் அதிகரிக்கும்.
  • கருப்பட்டியில் இரும்புச்சத்து அதிகம் உள்ளதால், இது ஹீமோகுளோபின் உற்பத்தியை அதிகரிக்க உதவும். உடலில் ஹீமோகுளோபின் அளவு குறைவாக இருந்தால் தான், இரத்த சோகை பிரச்சனை ஏற்படும். எனவே இரத்த சோகை ஏற்படாமல் இருக்க, கருப்பட்டியை அன்றாட உணவில் சேர்த்தால் இரத்த சோகை ஏற்படாது.
  • கருப்பட்டியில் கெமிக்கல் ஏதும் கலக்கப்படாமல் தயாரிப்பதால், இது மிகவும் ஆரோக்கியமானது. மேலும் கருப்பட்டி சேர்த்து சமைக்கும் எந்த ஒரு இனிப்பு பண்டமும் மிகவும் சுவையாக இருக்கும்.
  • நமது உடலை போர்வை போல் மூடி இருக்கும் தோல் உடலை வெளிப்புற வெப்பம் மற்றும் குளிரிலிருந்து பாதுகாக்கும் ஒரு கவசமாக இருக்கிறது. வயதாகும்போது பெரும்பாலானோருக்கு தோலில் சுருக்கங்கள் வருவதோடு பளபளப்பும் குறைகிறது.
  • கருப்பட்டியை அடிக்கடி சாப்பிட்டு வருபவர்களுக்கு தோலில் ஈரப்பதம் இருப்பதோடு சருமம் பளபளப்பு அதிகரித்து, தோல் சுருக்கங்கள் ஏற்படாமல் தடுக்கிறது.
  • உணவு உட்கொண்ட பின் கருப்பட்டியை சிறிது உட்கொண்டால், அது செரிமான உறுப்புக்களைத் தூண்டி, எளிதில் செரிமானம் நடைபெறச் செய்யும். அதுவும் கருப்பட்டி உடலினுள் செல்லும் போது அசிட்டிக் அமிலமாக மாறி, வயிற்றில் உள்ள நொதிகளின் செயல்பாட்டை அதிகரித்து, எளிதில் செரிமானமாகச் செய்யும். ஒருவரது உடலில் செரிமானம் சீராக நடைபெற்றால், குடலியக்கமும் சீராகி, மலச்சிக்கல் பிரச்சனை வராமல் இருக்கும்.
    சுத்தமான கல்லீரல் (Clean liver)
  • கருப்பட்டியை ஒருவர் தொடர்ச்சியாக எடுத்து வந்தால், அது கல்லீரல் செயல்பாட்டை சீராக்கும். மேலும் கருப்பட்டி கல்லீரலில் தேங்கியுள்ள டாக்ஸின்களை முழுமையாக வெளியேற்றி, கல்லீரலை சுத்தம் செய்ய உதவும்.
    நரம்பு மண்டலம் (Nervous System)
  • கருப்பட்டியில் இருக்கும் பொட்டாசியம், நரம்பு மண்டலத்தின் ஆரோக்கியத்திற்கு அவசியமானது. மேலும் இது நரம்புகளின் மென்மையான செயல்பாட்டிற்கு உதவி புரியும்.
    ஒற்றைத் தலைவலி (Migraine)
  • கருப்பட்டி அல்லது பனை வெல்லம் ஒற்றை தலைவலிக்கு நல்ல நிவாரணம் அளிக்கும். அதற்கு கருப்பட்டியை வெதுவெதுப்பான நீரில் கலந்து குடிக்கலாம் அல்லது குடிக்கும் டீயில் கருப்பட்டி சேர்த்து குடிப்பதன் மூலமும் ஒற்றைத் தலைவலி நீங்கும்.
  • சளி மற்றும் இருமல் (Cold and cough)
  • சளி, இருமல் போன்றவற்றில் இருந்து விடுபட வேண்டுமானால், அன்றாடம் குடிக்கும் காபி, டீயில் கருப்பட்டியை சேர்த்துக் கொள்ள வேண்டும். இதனால் மூக்கடைப்பில் இருந்து விடுதலை அளிப்பதோடு,
    சுவையூட்டி (Seasoning)
  • கருப்பட்டி ஒரு இயற்கைச் சுவையூட்டி. இதில் கெமிக்கல் ஏதும் கலக்கப்படாமல் தயாரிப்பதால், இது மிகவும் ஆரோக்கியமானது. மேலும் கருப்பட்டி சேர்த்து சமைக்கும் எந்த ஒரு இனிப்பு பண்டமும் மிகவும் சுவையாக இருக்கும்.
    கர்ப்பம் (Pregnancy)
  • கர்ப்பிணிகள் கருப்பட்டியை உணவில் சேர்த்துக் கொள்வதால், அது உடலில் இரும்புச்சத்தின் அளவை சீராக பராமரிப்பதோடு, ஏழாவது மாதத்தில் இருந்து பெண்கள் சந்திக்கும் வலியை தடுத்து, பிரசவம் சுகமாக நடக்க உதவும்.
    தாய்ப்பால் (Breastfeeding)
  • தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள், கருப்பட்டியை உணவில் சேர்ப்பதன் மூலம், குழந்தைக்கு சுத்தமான தாய்ப்பால் கிடைக்கும். இதனால் குழந்தையின் ஆரோக்கியமும் வளர்ச்சியும் சிறப்பாக இருக்கும்.
    நீர் தேக்கம் (Water stagnation)
  • உப்பிய வயிறு மற்றும் உடலில் நீர் தேக்க பிரச்சனை கொண்டவர்கள், கருப்பட்டியை அன்றாட உணவில் சேர்த்து வருவதன் மூலம், இப்பிரச்சனையில் இருந்து விடுபடுவதோடு, உடனடி நிவாரணமும் கிடைக்கும்.
Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %