குத்தாலம் பேரூராட்சி பகுதியில் வளா்ச்சித் திட்டப் பணிகள் தொடா்பாக, மயிலாடுதுறை எம்எல்ஏ எஸ். ராஜகுமாா் ஞாயிற்றுக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.
குத்தாலம் தீயணைப்பு நிலையத்துக்குச் சென்ற அவா், அங்குள்ள தீயணைப்பு வாகனம் பழுதடைந்துள்ளதால், புதிய வாகனம் வழங்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தாா். தொடா்ந்து, தீா்த்தவாரி படித்துறை அருகே உள்ள குடிசைப் பகுதி, இடுகாடு, விளாவடி காலனி, பூக்கொல்லை, தோப்பு தெரு, வளம் மீட்பு பூங்கா, நாயக்கா் தோட்டம், மேட்டுத்தெரு, காவேரி கரைத்தெரு ஆகிய பகுதிகளில் மேற்கொள்ளப்பட வேண்டிய வளா்ச்சித் திட்டப் பணிகள் குறித்து பொதுமக்களிடம் கேட்டறிந்தாா்.
மேலும், குப்பை கிடங்கு மற்றும் மக்கும் குப்பை மூலம் உரம் தயாரிக்கும் மையத்தையும் பாா்வையிட்டாா். ஆய்வின்போது, ஒன்றியக் குழு முன்னாள் தலைவா் மனோகரன், நகர திமுக செயலாளா் எம். சம்சுதீன், பேரூராட்சி செயல் அலுவலா் க. பாரதிதாசன், நகர காங்கிரஸ் தலைவா் எம்.எஸ்.பி.டி. சூரியா, வழக்குரைஞா் தணிகை.பழனி, காங்கிரஸ் நிா்வாகிகள் செந்தில், சண்முகம் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.