சிதம்பரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கஞ்சா பதுக்கி வைத்து விற்பவர்களை அதனை தடுக்கும் நோக்கில் கடலூர் எஸ்பி சக்திகணேஷ் உத்தரவின்பேரில் சிதம்பரம் டிஎஸ்பி ரமேஷ்ராஜ் மேற்பார்வையில் சிதம்பரம் நகர இன்ஸ்பெக்டர் ஆறுமுகம் சிதம்பரம் நகர சப்-இன்ஸ்பெக்டர் சுரேஷ் முருகன், கிள்ளை சப்-இன்ஸ்பெக்டர் நாகராஜன் தலைமை காவலர்கள் நடராஜன், மணி ஆகியோர் கொண்ட தனிப்படை அமைக்கப்ட்டது. சிதம்பரம் பள்ளிப்படை பகுதியில் நேற்று காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது சந்தேகத்தின் அடிப்படையில் நின்று கொண்டிருந்த நபரை விசாரணை செய்தனர். அவர் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளிக்க அந்த நபரை சோதனை செய்தபோது சுமார் 2 கிலோ கஞ்சா வைத்திருந்துள்ளார். இதனையடுத்து கஞ்சாவை பறிமுதல் செய்து அவரை காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை செய்த போது மயிலாடுதுறையை சேர்ந்த வெற்றிவேல் முதன்மையாக கஞ்சா வியாபாரம் செய்து சிதம்பரம் பகுதிகளில் பல்வேறு நபர்களிடம் சப்ளை செய்து வந்துள்ளார்.அவர் அளித்த தகவலின் பேரில் சிதம்பரம் பகுதியைச் சேர்ந்த சாகுல் ஹமீது (35),பயாஸ் (23), கார்த்திகேயன் (26) ஆகியோரிடம் இருந்து 1.5 கிலோ கஞ்சாவை மற்றும் ஒரு பைக்கை பறிமுதல் செய்தனர். இதுபோல் சிதம்பரம் நகரைச் சேர்ந்த நடராஜன் (40), சுப்பு (36), மாசிலாமணி (43) உள்ளிட்டோரிடம் இருந்து 1.5 கிலோ கஞ்சா மற்றும் ஒரு பைக்கை பறிமுதல் செய்துள்ளனர்.
செய்தி: பாலாஜி,சிதம்பரம்.