0
0
Read Time:1 Minute, 10 Second
நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே காளம்புழா பகுதியில் டாஸ்மாக் மதுக்கடை இயங்கி வந்தது. ஊரடங்கில் மூடப்பட்ட கடை நேற்று காலை மீண்டும் திறக்கப்பட்டது. நேற்று காலை கடையை திறந்து உள்ளே சென்றபோது பாட்டில்கள் சரிந்து கிடப்பதை பார்த்த விற்பனையாளர் கடையை சோதனை செய்துள்ளார்.
அப்போது கடையின் உள்ளே அடுக்கி வைக்கப்பட்டிருந்த 12 ஒயின் பாட்டில்கள் காலியான நிலையில் கிழே கிடந்தன. எலிகள் கடைக்குள் புகுந்து பாட்டில்களின் மூடியைக் கடித்து கீழே தள்ளி அவற்றை குடித்துள்ளதாகவும். 12 பாட்டில்கள் சேதமடைந்துள்ளதாகவும் இவற்றின் மதிப்பு ரூ.1900 எனவும் கடை ஊழியர்கள் தெரிவித்தனர். இது குறித்து டாஸ்மாக் அதிகாரிகளுக்கு ஊழியர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.