இதுகுறித்து அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
ஜார்கண்ட் மாநிலத்தில் ஆதிவாசிகள் மக்கள் மத்தியில் பணியாற்றி கொண்டு இருந்தவர் 84 வயதான அருட்தந்தை ஸ்டேன் சுவாமி . கத்தோலிக்க திருச்சபையை சேர்ந்த Jesuit சபையை சேர்ந்தவர். கடந்த ஆண்டு ஓன்றிய அரசு பீமா கோரேகான் என்னும் இடத்தில் நடைபெற்ற வன்முறைக்கு கைது செய்து சிறையில் அடைத்தனர்.
அருட்தந்தை அவர்களுக்கு கரோனர் நோய் தொற்றின் காரணமாக உடல் நிலை மோசம் அடைந்ததை தொடர்ந்து மும்பை உயர் நீதிமன்றம் உத்தரவின் பேரில் கடந்த மே மாதம் 30ந் தேதி தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். மருத்துவ காரணங்களின் அடிப்படையில் பிணை வழங்க வேண்டும் என நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட வழக்கில் என்ஐஏ நிதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது.இந்நிலையில் அருட்தந்தை உயிர் இழந்த செய்தி நெஞ்சை நொறுக்குவதாக உள்ளது –
வாழ் நாள் முழுவதும் பழங்குடி மக்கள், விளிம்பு நிலை மக்கள் உரிமைக்களுக்காக போராடி வாழ்ந்து மறைந்த அருட்தந்தை ஸ்டேன் சுவாமி அவர்களுக்கு வீர வணக்க அஞ்சலி செலுத்தப்படுவதாக உலக தமிழ் கிறிஸ்தவ சம்மேளனம் தலைவர் Rev.ராஜேஷ் ஜோ, பொது செயலாளர் பிஷப், செலோத்ராஜ், பொருளாளர் ஜெபசிங் ஆகியோர் கூட்டாக அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.