மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி பேரூராட்சிக்கு உட்பட்ட எருக்கட்டாஞ்சேரி தனியார் நடுநிலைப் பள்ளி சார்பாக எட்டாம் வகுப்பு தேசிய திறனாய்வு தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா நடைபெற்றது.
இதில் நாகை வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளரும், பூம்புகார் சட்டமன்ற உறுப்பினருமான நிவேதா எம்.முருகன் கலந்துகொண்டு வெற்றிபெற்ற மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கினார்.

மேலும் முதலமைச்சர் கொரோனா நிவாரண நிதிக்கு பள்ளி சார்பாக ரூபாய் ஒரு லட்சம் வழங்கப்பட்டது. அதே பள்ளியில் படிக்கும் நான்காம் வகுப்பு மாணவி அதிதர்ஷினி தான் சேர்த்து வைத்திருந்த உண்டியல் பணம் 2,000 ரூபாயை முதல்வர் நிவாரண நிதிக்கு வழங்கினார்.இதில் நாகை வடக்கு மாவட்ட திமுக பொருளாளர் ஜி என் ரவி, செம்பை தெற்கு ஒன்றிய செயலாளர் அப்துல்மாலிக், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எம்எம். சித்திக், செம்பை ஒன்றிய துணை பெருந்தலைவர் மைனர் பாஸ்கர், மயிலாடுதுறை மாவட்ட தகவல் தொழில் நுட்ப பிரிவு அணி அமைப்பாளர் ஸ்ரீதர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
செய்தியாளர்: யோகுதாஸ், மயிலாடுதுறை.