சிதம்பரம் இருப்புப்பாதை காவல் நிலையம் சார்பில், இன்று 10.07.2021 கொரோனா விழிப்புணர்வு மற்றும் விபத்து விழிப்புணர்வு நிகழ்ச்சியானது, புஞ்சைமகத்துவாழ்க்கை – அவசர கால சுனாமி மறு சீரமைப்பு மையத்தில், மடுவங்கரை ஊராட்சி மன்றத்தலைவர் சம்பந்தமூர்த்தி தலைமையில், புஞ்சைமகத்துவாழ்க்கை – 5 வது வார்டு உறுப்பினர் முத்துகுமாரசாமி முன்னிலையிலும், கிள்ளை இரயில் நிலையம் எதிரில் உள்ள குண்டுமேடு, நவாப்பேட்டை, பு.மடுவங்கரை,புஞ்சைமகத்துவாழ்க்கை ஆகிய கிராமங்களின் மக்களை திரட்டி கூட்டம் நடத்தபட்டது. இதில் சுமார் 150 நபர்கள் கலந்துகொண்டனர். இதில் பொதுமக்களுக்கு இரயில்வே தண்டவாளத்தில் நடந்து செல்லும்போது செல் போன் பேசிக்கொண்டும், head phone போட்டுகொண்டும் நடந்து செல்லக்கூடாது மற்றும் இரயில்வே கேட் போட்ட பிறகு கேட்டுக்கு புகுந்துசெல்ல கூடாது, இரயில்வே தண்டவாளத்தை ஆடு, மாடுகளை ஓட்டி கடந்து செல்லக்கூடாது, இரயில்வே தண்டவாளத்தை கடக்க இரயில்வே கேட் மற்றும் மேம்பாலத்தை பயன்படுத்த வேண்டும், கடந்து செல்லும்முன் இருபுறமும் பார்த்து கடந்து செல்லவேண்டும் மற்றும் கொரோனா விழிப்புணர்வு தொடர்பாக சமூக இடைவெளி, முகக்கவசம் அணிதல், கிருமிநாசினி பயன்படுத்துதல் போன்றவற்றை, துண்டு பிரசுரங்களை கொடுத்து Mega Phone மூலம் சமூக இடைவெளி கடைபிடிக்கப்பட்டு விபத்து விழிப்புணர்வு மற்றும் கொரோனா விழிப்புணர்வு அளிக்கப்பட்டது.
செய்தி: பாலாஜி,சிதம்பரம்.