தொழிற்சங்க கூட்டமைப்பின் சார்பாக பெட்ரோல் டீசல் சமையல் எரிவாயு விலை உயர்வை திரும்பப் பெறக் கோரி மீன்பிடி தொழிற்சங்க மாவட்ட செயலாளர் அம்மையப்பன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்தில் கோடிக்கணக்கில் அந்நிய செலவாணியை உருவாக்கித்தரும் மீன்பிடித் தொழிலுக்கு அனைத்து வரிகளையும் ரத்து செய்து கொள்முதல் விலைக்கு நாட்டுப் படகுகள் விசைப்படகுகள் டீசல் மண்ணெண்ணெய் வழங்க வேண்டும்.
தடைக்காலம் மற்றும் மழைக்காலத்தில் வழங்கப்படும் நிவாரணம் 5000 ரூபாயை விடுபட்டவர்களுக்கு மறுஆய்வு செய்து வழங்க வேண்டும்.
மீன்பிடித் தொழில் செய்யும் மீனவர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கிட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் மீன்பிடித் தொழில் சங்க மாவட்டத் தலைவர் ஜீவானந்தம், மாவட்ட செயலாளர் ரவீந்திரன் முன்னாள் மாவட்ட துணை செயலாளர் ரவிச்சந்திரன், மாவட்டத் தலைவர் சீனி மணி எஸ் எஃப் மாவட்ட செயலாளர் அமுல் காஸ்ட்ரோ f5 மாவட்ட செயலாளர் குணசேகரன் DYFI ஒன்றிய செயலாளர்கள் ஐயப்பன், அன்பு உள்ளிட்டோர் கலந்து கொண்டு மத்திய அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர்.
நிருபர்: யோகுதாஸ், மயிலாடுதுறை.