தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே கர்நாடக அரசு அணை கட்டி விவகாரம் கடந்த அதிமுக ஆட்சியின் துணையோடுதான் நடைபெற்றுள்ளது- தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில குழு கூட்டத்தில் குற்றச்சாட்டு- நெல் கொள்முதல் நிலையங்களில் முறைகேடாக பணம் வசூலிப்பதை தடுக்க கோரிக்கை:-
தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநில குழு கூட்டம் மாநில தலைவர் சுப்பிரமணியன் மயிலாடுதுறையில் வெள்ளிக்கிழமை துவங்கி இரண்டு நாட்கள் நடைபெற்றது.
கூட்டத்தில் தமிழ்நாட்டில் அனைத்து மாவட்டங்களில் இருந்தும் தமிழ்நாடு விவசாயிகள் சங்க பொறுப்பாளர்கள் பங்கேற்றனர். கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அச்சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் சண்முகம் மாநில குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் குறித்து செய்தியாளர்களிடம்பேசினார்.
அப்போது அவர் கூறும்போது,
தமிழ்நாடு விவசாயிகளின் பல்வேறு பிரச்சினைகள் குறித்து தமிழக அரசு ஆக்கபூர்வ நடவடிக்கைகள் எடுக்க வேண்டும், வேளாண் திருத்தச் சட்டங்களை கண்டித்து டெல்லியில் போராடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவாக தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் டெல்லி போராட்டத்தில் பங்கேற்பது என்றும், காவிரி நடுவர் மன்றம் தொடர்பான உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு விரோதமாக கர்நாடக முதலமைச்சர் பேசி வருவது கண்டனத்திற்குரியது.
மத்திய பாரதிய ஜனதா அரசு ஒரு மாநிலத்திற்கு ஆதரவாக செயல்பட கூடாது. மேகதாது பிரச்சனையில் தமிழகம் வஞ்சிக்கப்டக்கூடாது,
மத்திய அரசு மாநில அரசின் உரிமைகளை பறிக்கும் வகைகள் கூட்டுறவு அமைச்சகம் ஏற்படுத்துவது வன்மையாக கண்டிக்கத்தக்கது பெருமுதலாளிகளுக்கு, கூட்டுறவு வங்கிகளின் முதலீடு செல்ல இது வழிவகுக்கும்.
தமிழ்நாடு முழுவதும் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் மூட்டைகள் தேங்கிக் கிடக்கின்றன மூட்டைகளுக்கு முறைகேடாக 40 ரூபாய் வசூலிக்கப்படுகிறது இதனை தமிழக அரசு தடுத்து நிறுத்தி தற்காலிக குடோன்கள் வேண்டும். கிருஷ்ணகிரி அருகே தென்பெண்ணை ஆற்றில் தண்ணீர் வரக்கூடிய மார்க்கண்டேய நதியின் குறுக்கே கர்நாடக அரசு கடந்த 2 ஆண்டு காலமாக பெரிய அணையைக் கட்டி உள்ளது. இதற்கு அப்போதைய அதிமுக அரசு மற்றும் அதிகாரிகள் உடந்தையாக இருந்துள்ளார்கள் என்ற குற்றச்சாட்டை மாநில குழு கூட்டம் முன்வைக்கிறது, கிருஷ்ணகிரியில் பொறுப்பிலிருந்த பொதுப்பணித்துறை அதிகாரிகளை விசாரணை செய்ய வேண்டும்.
கடந்த ஆண்டு பயிர் காப்பீட்டு தொகையை மத்திய மாநில அரசுகள் காப்பீட்டு நிறுவனங்களுக்கு வழங்காததால் விவசாயிகளுக்கு பயிர் காப்பீட்டு தொகை வந்து சேரவில்லை இதனை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும், மயிலாடுதுறை மாவட்டத்தில் நான்கு வழி சாலைகளுக்கு இடம் கொடுத்த விவசாயிகளுக்கு சட்டப்படியான பணம் வழங்கப்படவில்லை இதனை உடனடியாக ஆட்சியாளர்கள் கருத்தில் கொண்டு பணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாநில பொதுச்செயலாளர் சண்முகம் கூறினார்.
நிருபர்: யோகுதாஸ், மயிலாடுதுறை.