நான்-ஸ்டிக் போன்ற பாத்திரங்களில் சமைப்பதன் மூலம் அதில் பயன்படுத்தப்படும் கெமிக்கல்கள் நம் உணவின் வழியே நமக்குள்ளும் சென்றுவிடும். இதனால் பல உடல் உபாதைகளுக்கு நாம் ஆளாகலாம். மண் பாத்திரத்தில் சமைக்கும் உணவை குளிர்சாதன பெட்டியில் வைக்கவேண்டிய அவசியமும் இல்லை.இரண்டு நாட்கள் ஆனாலும் உணவு கெட்டுப்போகாமல் அப்படியே நன்றாக இருக்கும். காய்கறிகளின் சத்துக்களை நமக்கு அப்படியே தருவதால், நல்ல உடல் ஆரோக்கியத்துடன் நாம் வாழலாம்.
மண் பாத்திரங்கள் உணவில் சூட்டை நீண்ட நேரம் தக்க வைத்துக் கொள்ளும் என்பதால் அவற்றை சமைத்து சேமித்து வைக்கும் உணவுகள் சீக்கிரம் கெட்டுப் போகாது. மண் பாத்திரங்களை தண்ணீரில் கழுவும் பொழுது அதன் கண்களில் நீர் தேங்கி சமைக்கும் பொழுது அது ஆவியாகி வெளியேறும் தவிர உணவில் உள்ள சத்துகள் ஆவது தடுக்கப்படும் மேலும் மண் சட்டியில் உணவு சீக்கிரம் வெந்து விடும் என்பதால் உணவில் உள்ள சத்துகள் ஆவியாகி வெளியேறி வெளியேறாமல் உடலிலேயே தங்கி ஆரோக்கியத்தை அதிகரிக்கும்
மண்சட்டியில் சமைக்கும் உணவு ஆவியில் வேகவைத்த உணவு என்பதால் செரிமான கோளாறுகள் ஏற்படாது உலோக பாத்திரங்கள் போல அமிலத்தன்மை பாதிப்பு மண்சட்டியில் இல்லை என்பதால் செரிமான பிரச்சனை ஏற்படாது .உணவுக் குழாய்க்கு உகந்ததாக அமையும் உடலுக்கு குளிர்ச்சியை தரவல்லது என்பதால் உடல் வெப்பத்தால் ஏற்படும் பாதிப்புகளிலிருந்து விடுபடலாம்.
மண் சட்டியில் இருந்து நன்மை செய்யும் பாக்டீரியாக்கள் உணவுப் பொருட்களில் ஆரோக்கியத்தை சேர்க்கும் மண்சட்டியில் சமைக்கும் பொழுது உணவுப்பொருள் சக்தியும் கொண்டது என்பதால் அதிக எண்ணெய் பயன்படுத்த வேண்டி இருக்காது உடலின் வெப்பநிலையை சீராக வைக்க உதவும் புதிதாக வாங்கி வந்த மண் பாத்திரங்கள் இரண்டு நாட்கள் தண்ணீரில் ஊறவைத்து நன்கு கழுவி வெயிலில் வைத்து எடுத்த பின்னரே சமையலுக்கு பயன்படுத்த ஆரம்பிக்க வேண்டும் மண் சட்டியில் உள்ள துகள்களின் உணவில் உள்ள பாக்டீரியாக்கள் தங்க வாய்ப்புள்ளது என்பதால் மண்சட்டியை தேங்காய் பயன்படுத்தி சாம்பல் கொண்டு சுத்தம் செய்ய வேண்டும் அலசி வெயிலில் உலர வைத்த பின்னரே மீண்டும் பயன்படுத்த வேண்டும் ஒரு முறை வெப்பமான மண்பாத்திரம் நீண்ட நேரம் அந்த வெப்பத்தைத் தக்கவைத்துக் கொள்ளும் என்பதால் ஒரே பாத்திரத்தை அடுத்தடுத்து வெவ்வேறு உணவுகளைச் சமைக்கப் பயன்படுத்தலாம்.
மற்ற பாத்திரங்களைவிட சீரான வெப்பநிலையை அதிக நேரம் பராமரிக்கும். அதனால், மண்பானையில் சமைக்கும் உணவு நீண்ட நேரம் கெடாமல் இருக்கும். மண்பானையில் சமைக்கும் போது, அதிக எண்ணெய் பயன்படுத்தவும் தேவையில்லை. எனவே மண்பானையில் சமைக்கும் உணவு மிகவும் ஆரோக்கியமானதாகும்.
மண்பாத்திரத்துல சமைப்பதால் உணவு விரைவில் கெட்டுப் போகாது. குறிப்பாக மண்பானையில் செய்கின்ற மீன் குழம்புக்கு ஈடு இணை கிடையாது. ஒரு வாரம்கூட கெட்டுப்போகாமல் இருக்கும். மத்த பாத்திரங்களில் வைக்கின்ற உணவுப் பொருள்கள், வெயியில் நீர்த்துப் போயிரும். ஆனா, மண்பானையோட தன்மையால் அது நீர்த்துப் போகாது.
மண் பாத்திரங்கள் உணவில் உள்ள அமிலத்தன்மையை சமப்படுத்தும் தன்மை கொண்டவை. உப்பு, புளிப்பு சுவையுடைய உணவுகள் சமைக்கும்போது, மண்பானை தீங்கான விளைவுகள் எதையும் ஏற்படுத்துவதில்லை. ஆனால் உலோக பாத்திரங்கள் உணவுடன் வினைபுரியும் நிலை உள்ளது.
ப்ளாஸ்டிக் தடையால் பலரும் தற்போது வாழை இலை, பாக்கு மட்டை தட்டுகள் என இயற்கையான பொருட்களை உபயோகிக்க தொடங்கியுள்ளனர். இந்த மாற்றம் நமக்கும் சுற்றுசூழலுக்கும் நன்மை பயக்கும்.வீட்டிலும் முடிந்தவரை ப்ளாஸ்டிக் பொருட்களின் உபயோகத்தை தவிர்க்க வேண்டும். மண் பாத்திரங்களை வாங்கி சமைப்பதன் மூலம் சிறு குறு தொழிலாளர்கள் பயனடைவதோடு நமது பாரம்பரியமும் காக்கப்படும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை.
கல் சட்டி செய்வதற்கு பயன்படும் மாவு கல்லில் மக்னீசியம் இருப்பதால், நேரடியாக உணவில் இந்த சத்து கலப்பதற்கு கல் சட்டி உதவும் என்கிறார். பிரிட்ஜ் பயன்பாட்டுக்கு வரும்வரை, பல இல்லங்களில் உணவு கெட்டுப்போகாமல் இருக்க கல் சட்டிகள் பயன்படுத்தப்பட்டன.