0
0
Read Time:1 Minute, 5 Second
செம்பனாா்கோவில் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் பருத்தி ஏலம் திங்கள்கிழமை நடைபெற்றது. நாகை விற்பனைக் குழு செயலாளா் ரமேஷ் தலைமையிலும், தலைமை அலுவலக பொறுப்பாளா் சிலம்பரசன் முன்னிலையிலும் பருத்தி மறைமுக ஏலம் நடைபெற்றது.
இதில், மயிலாடுதுறை, தஞ்சாவூா், கடலூா், நாகப்பட்டினம், திருவாருா், தேனி, சத்தியமங்கலம், ஆத்தூா், விருதுநகா் ஆகிய மாவட்டங்களில் இருந்து 15-க்கும் மேற்பட்ட வியாபாரிகள் பங்கேற்றனா். சுமாா் 3100 குவிண்டால் பருத்தியை விவசாயிகள் விற்பனைக்காக கொண்டுவந்திருந்தனா். இதில் அதிகபட்சமாக குவிண்டால் ஒன்று ரூ. 7,156- க்கும் சராசரியாக ரூ. 6,100-க்கும் விலை போனது. இதனால், விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனா்.