0 0
Read Time:1 Minute, 55 Second

நாகையை அடுத்த அக்கரைப்பேட்டை மீனவக் கிராமத்தை சேர்ந்தவர்கள் கலியரசு(47), ரத்தினவேல்(45). இவர்களுக்குச் சொந்தமான பைபர் படகுகள் உள்பட 50-க்கும் மேற்பட்ட படகுகள் அக்கரைப்பேட்டை கடுவையாற்றில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. இந்த நிலையில் இன்று அதிகாலை கடுவையாற்றுப் படகுத்துறை பகுதியிலிருந்து கரும்புகையுடன் துர்நாற்றம் வீசியுள்ளது. அருகில் இருந்த மீனவர்கள் அங்குச் சென்று பார்த்தபோது, கலியரசு மற்றும் ரத்தினவேலு ஆகியோருக்குச் சொந்தமான 2 பைபர் படகுகளில் தீப்பற்றி எரிவது தெரியவந்தது.

இதையடுத்து, மீனவர்கள் நீண்ட நேரம் போராடி தீயைக் கட்டுப்படுத்தினர். இதில், கலியரசு படகு மற்றும் இன்ஜின், வலைகள், ஐஸ் பெட்டி ஆகியன முற்றிலும் சேதமடைந்தன. ரத்தினவேலுக்கு சொந்தமான படகு மற்றும் இன்ஜின் சேதமடைந்தன.

இந்த தீ விபத்துக்கு மர்ம நபர்களின் சதிச் செயலே காரணம் எனவும், சேதமான பொருள்களின் மதிப்பு சுமார் ரூ. 6 லட்சத்துக்கும் அதிகம் எனவும் மீனவர்கள் தெரிவித்தனர். தகவலறிந்த மீன்வளத்துறை அதிகாரிகள் கடலோர பாதுகாப்பு குழும காவலர்கள் விசாரணை மேற்கொண்டனர். மீனவர்கள் அளித்த புகாரின் பேரில் நாகப்பட்டினம் நகர காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %