0 0
Read Time:2 Minute, 2 Second

கொரோனாவால் இறந்த ஊழியர்கள் குடும்பத்திற்கு ரூ.50 லட்சம் வழங்கக்கோரி நாகையில், அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

நாகை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் அரசு ஊழியர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட பொருளாளர் அந்துவன் சேரல் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் அன்பழகன் முன்னிலை வகித்தார். தொழிற்சங்க கூட்டமைப்பு தலைவர் சிவகுமார் கலந்து கொண்டு பேசினார்.இதில் 30 பெண்கள் உள்பட 50-க்கும் மேற்பட்ட அனைத்து துறை அரசு ஊழியர்கள் கலந்து கொண்டனர்.கொரோனா தொற்றால் இறந்த அரசு ஊழியர்களின் குடும்பத்திற்கு ரூ.50 லட்சம் நிவாரணம் மற்றும் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும். அனைவருக்கும் தடுப்பூசி போட வேண்டும். சேவைத்துறைகளை பலப்படுத்த வேண்டும்.

அரசுத்துறைகள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் உள்ள அனைத்து காலி பணியிடங்களையும் வேலைவாய்ப்பு அலுவலகங்கள் மூலம் நிரப்ப வேண்டும்.அனைத்து தற்காலிக மற்றும் ஒப்பந்த தினக்கூலி ஊழியர்களை பணி நிரந்தர செய்ய வேண்டும். முடக்கப்பட்ட அகவிலைப்படி மற்றும் சரண்டர் உள்ளிட்ட பண பயன்களை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டன.. முடிவில் வட்டச் செயலாளர் தமிழ்வாணன் நன்றி கூறினார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %