0 0
Read Time:1 Minute, 40 Second

சென்னை: இன்று மேகதாது அணை விவகாரம் தொடர்பாக பிரதமர் மோடியை கர்நாடக மாநில முதலமைச்சர் எடியூரப்பா சந்திக்கிறார். இந்த நிலையில் தமிழகத்தின் சார்பில் அனைத்து கட்சி குழு டெல்லி சென்றுள்ளது. டெல்லியில் தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தலைமையிலான குழு டெல்லி சென்றுள்ளனர். வரும் ஞாயிறு அன்று முதல்வர் டெல்லி செல்ல உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. திங்கட்கிழமை டெல்லியில் அனைத்துக்கட்சி குழுவோடு சந்திப்பார் என்று சொல்லப்படுகிறது.

இன்று மாலை சென்னையில் திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டம் நடைபெறுகிறது. அந்த கூட்டத்தில் எந்த தேதியில் சந்திக்கலாம், தமிழகத்தில் உள்ள அனைத்து கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் சந்திக்கலாமா என்ற ஒரு தகவலும் சொல்லப்படுகிறது. பிரதமரை சந்திக்க தமிழக முதல்வர் டெல்லி செல்வதாகவும், ஆனால் எந்த தேதியில் பிரதமரை சந்திக்கிறார் என்று தேதி முடிவாகவில்லை என்று தமிழக முதல்வர் அலுவலக தகவல்கள் தெரிவிக்கின்றன. 19ஆம் தேதி நாடாளுமன்ற கூட்டத்தொடர் தொடங்க உள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %