மயிலாடுதுறை மாவட்டம் திருக்கடையூரில் புகழ்பெற்ற அபிராமி அம்மன் சமேத அமிர்த கடேஸ்வரர் ஆலயமும் அமைந்துள்ளது. பக்த மார்க்கண்டேயனுக்காக எமனை இறைவன் சம்காரம் செய்த இந்த ஆலயத்தில் வழிபாடு செய்வதே எமபயம் நீக்கும் ஆயுளை வளர்க்கும் என்பதால் தினமும் 60, 80 ஆகிய வயதுகளில் செய்யப்படும் சஷ்டியப்த பூர்த்தி சதாபிஷேகம் ஆகிய திருமணங்கள் புகழ்பெற்ற ஒன்றாகும். தருமபுரம் ஆதினத்திற்கு சொந்தமான அமிர்தகடேஸ்வரர் கோவிலின் கும்பாபிஷேக விழாவிற்கான திருப்பணிகள் துவங்குகின்றன இதனை முன்னிட்டு பந்தல் கால் முகூர்த்த விழா வெள்ளிக்கிழமை
தருமபுர ஆதினம் 27-வது மடாதிபதி குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக பரமாச்சாரிய சாமிகள் முன்னிலையில் பந்தக்கால் நடும் விழா நடைபெற்றது.

அதனைத்தொடர்ந்து உலக மக்கள் நன்மைக்காக கொரோனா நோய் தொற்றிலிருந்து முழுவதும் விடுபடுவதற்காக திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் சன்னதியில் அஸ்திர யாக பூஜை செய்து மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. பின்னர் அமிர்தகடேஸ்வரர் சாமி அபிராமி அம்பாள் ஆகிய சாமிகளுக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார, ஆராதனை நடைப்பெற்றது.

நிகழ்ச்சியில் தொண்டை மண்டலத்தின் 233 வது பட்டம் ஸ்ரீலஸ்ரீ திருச்சிற்றம்பல தேசிக ஞானப்பிரகாச பரமாச்சாரிய சுவாமிகள், தருமபுர ஆதீன கட்டளை தம்பிரான் சுவாமிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
நிருபர்: யோகுதாஸ், மயிலாடுதுறை.