மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி அடுத்து பொறையார் பெரிய பள்ளிவாசல் எதிரில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் சுகாதாரத்துறை இணைந்து கொரோனா பரிசோதனை மற்றும் தடுப்பூசி முகாம் தமுமுக நகர தலைவர் ஹிதாயத்துல்லா தலைமையில் நடைபெற்றது.
முன்னதாக மருத்துவ செவிலியர்கள் மருத்துவ சுகாதார ஆய்வாளர்களின் பணிகளை பாராட்டி த மு மு க நிர்வாகத்தினர் விருதுகள் வழங்கி சிறப்பித்தனர். நிகழ்ச்சியில் நகர செயலாளர் யாசின் மெய்தீன் முன்னிலை வகித்தார். முன்னாள் மாவட்ட துணை செயலாளர் முஹம்மது யூசுப் வரவேற்புரையாற்றினார்.
முகாமில் வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் கார்த்திக் சந்திரகுமார் தலைமையில், சுகாதார மேற்பார்வையாளர் வெங்கடேசன், சுகாதார ஆய்வாளர் ஜெயக்குமார் ஆகியோர் பங்கேற்று 200 -க்கும் மேற்பட்டவர்களுக்கு முதற்கட்டமாக கொரோனா தடுப்பு ஊசி செலுத்தப்பட்டது.
நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினர்களாக மாநில செயலாளர் அப்துல் ரஹீம், மாவட்ட தலைவர் ஷேக் அலாவுதீன், மாவட்ட செயலாளர் பாசித், மாவட்ட பொருளாளர் ஷேக்தாவூது, ம ம க மாவட்ட செயலாளர் முபாரக் அலி ஆகியோர் கலந்து கொண்டனர். மாநில தொண்டரணி துணை செயலாளர் சாகுல் ஹமீது, மருத்துவ செவிலியர்கள் மற்றும் மாநில மாவட்ட த மு மு க பொறுப்பாளர்கள் பலர் உடனிருந்தனர்.நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழக நிர்வாகிகள் செய்திருந்தனர்.
நிருபர்: யோகுதாஸ், மயிலாடுதுறை.