0 0
Read Time:2 Minute, 12 Second

முதல்-அமைச்சர் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டத்தின் கீழ் பதிவு செய்து 18 வயது நிறைவடைந்த பெண் குழந்தைகள் முதிர்வு தொகை பெற ஆவணங்களை சமர்பிக்கலாம் என்று கலெக்டர் லலிதா தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

தமிழக அரசின் முதல்-அமைச்சர் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டத்தின் கீழ் விண்ணப்பம் செய்து பெற்ற வைப்பு தொகை பத்திரத்தினை தமிழ்நாடு மின்விசை நிதி மற்றும் மேம்பாட்டு கழகம் என்ற நிறுவனத்திற்கு முதிர்வு தொகை பெற்று வழங்குவதற்கு அனுப்பிட 18 வயது நிரம்பிய பெண் குழந்தைகள் மற்றும் அவரின் தாய் பெண் குழந்தையின் கீழ்கண்ட ஆவணங்களை நாகை மாவட்ட சமூகநல அலுவலகத்தில் நேரில் சமர்ப்பிக்க வேண்டும்.

அதன் பின்னர் தமிழ்நாடு மின்விசை நிதி மற்றும் மேம்பாட்டு கழகத்திற்கு கருத்துரு அனுப்பப்பட்டு, முதிர்வு தொகை பெண் குழந்தையின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும்.
வைப்புத் தொகை பத்திரத்தின் நகல், பிறப்பு சான்றிதழ் நகல், 10-ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் நகல், ஆதார் அட்டை நகல், வங்கி கணக்கு புத்தகத்தின் நகல், புகைப்படம்-2 ஆகியவற்றை மாவட்ட சமூகநல அலுவலகம், அரசு நகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகம், நீலா தெற்கு வீதி, நாகப்பட்டினம் என்ற முகவரியில் உள்ள சமூக நல அலுவலகத்தில் நேரில் சமர்ப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %