மயிலாடுதுறை மாவட்டம் சந்திரபாடி, திருமுல்லைவாசல், பூம்புகார் உள்ளிட்ட 14 மீனவ கிராமத்தில் மீனவர்கள் தொடர் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளனர்.
சந்திரபாடியில் மீன்பிடி ஒழுங்குமுறை சட்டம் 1983 யின்படி 21 வகையான சட்ட திருத்தத்தையும் உடனே அமல்படுத்த வேண்டி சனிக்கிழமை முதல் துவங்கி மாபெரும் தொடர் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்று வருகிறது.
சுருக்கு மடி வலைகள் மட்டும் தடை செய்துள்ளதாகவும் தடை செய்யப்பட்ட இறால் வலை உள்ளிட்ட மற்ற வலைகளை பயன்படுத்த அரசு அனுமதித்து வருவதாகவும் மீனவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். மீனவர்களும் கடலுக்கு செல்ல அனுமதிக்க வேண்டுமென வலியுறுத்தி பூம்புகார் திருமுல்லைவாசல் சந்திர பாடி உள்ளிட்ட 14 கிராமங்களைச் சேர்ந்த 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் தங்கள் கிராமங்களிலேயே தொடர் உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கியுள்ளனர்.

15 ஆண்டுகளுக்கு மேலாக தொழில் செய்து வரும் சுருக்குவலை தடை செய்யப்பட்ட தொழில் என்று கூறி தடை செய்ய நினைக்கும் தமிழக அரசு மீன்வளத் துறை மீன்வளத் துறை அதிகாரிகளையும் வன்மையாக கண்டித்தும், சில மீனவ கிராமங்களில் காழ்ப்புணர்ச்சியின் காரணமாக அவர்களின் தூண்டுதலின் பெயரில் மீன்பிடித் தொழில் செய்யும் அதனை சார்ந்த தொழிலாளர்களையும் நசுக்க நினைக்கும் மீன்வளத்துறை அதிகாரிகளை வன்மையாக கண்டித்து மீன்பிடி ஒழுங்குமுறை சட்டம் 1983 இன் படி அனைத்து வகையான மீன்பிடித் தொழிலையும் முறைப்படுத்த வேண்டும். அந்தந்த தொழில்களில் உள்ள சட்ட விதிமீறல் இதற்கு முறையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து உண்ணாவிரத போராட்டம் நடத்தி வருகின்றனர்.

மேலும் தமிழக அரசு எங்களுக்கு சரியான தீர்வு கிடைக்கவில்லை என்றால் கடலில் இறங்கி போராட்டம் நடத்தி சுருக்குமடி வலைக்கு அனுமதி வழங்கக் கோரி மயிலாடுதுறை மாவட்டத்தில் 14 மீனவ கிராமங்களைச் சேர்ந்த மீனவர்களின் கோரிக்கைகளை பதாகை மற்றும் விளம்பர தட்டி பதாகைகள் வைத்து போராட்டம் சனிக்கிழமை தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்
மேலும், தங்களது போராட்டத்தை அரசு செவி சாய்க்கவில்லை என்றால் வங்க கடலில் இறங்கி போராட்டம், குடும்ப அட்டைகள் மற்றும் ஆதார் அட்டைகளை அரசு அதிகாரிகளிடம் ஒப்படைக்க போவதாகவும் எச்சரித்து உள்ளனர்.
மேலும் தமிழக அரசு எங்களுக்கு சரியான தீர்வு கிடைக்க ஏற்பாடு செய்யவில்லை என்றால் நாங்கள் அனைவரும் வங்கக்கடலில் இறங்கி போராட்டம் நடத்த உள்ளோம் என்று மீனவ கிராம மக்கள் கூறினர்.
நிருபர்: யோகுதாஸ், மயிலாடுதுறை.